×

விவசாயிகள் கோரிக்கை கும்பகோணம் பகுதியில் இரவு 11.30 மணி வரை கடைகள் திறந்திருக்க அனுமதி வேண்டும் காவல்துறை விழிப்புணர்வு கூட்டத்தில் வலியுறுத்தல்

கும்பகோணம், ஆக. 13:  கும்பகோணம் பகுதியில் இரவு 11.30 மணி வரை கடைகள் திறந்திருக்க அனுமதிக்க வேண்டுமென காவல்துறை சார்பில் விழிப்புணர்வு கூட்டத்தில் வணிகர்கள் வலியுறுத்தினர். கும்பகோணம் உட்கோட்ட காவல்துறை சார்பில் மகாமகம் சிறப்பு கட்டுப்பாட்டு அறையில் ஒருங்கிணைந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. இன்ஸ்பெக்டர்கள் மகாதேவன், ரமேஷ்குமார், ராமமூர்த்தி, ரேகாராணி முன்னிலை வகித்தனர். டிஎஸ்பி கணேசமூர்த்தி தலைமை வகித்து பேசுகையில், சமூக விரோத சக்திகளை கண்காணிக்கவும், குற்ற செயல்களை தடுக்கவும், சட்டம் ஒழுங்கை பராமரிக்கவும் மேற்கொள்ளப்படும் நடவடிக்கை குறித்து பேசினார். இதைதொடர்ந்து வணிக நிறுவனங்களில் சிசிடிவி கேமராக்களை அவசியம் பொருத்த வேண்டும். குறிப்பாக சாலை முழுவதும் இடைவெளி இல்லாமல் கேமராவில் பதிவாகுமாறு அமைக்க வேண்டும். மின்சப்ளை பாதிக்கப்பட்டாலும் இன்வர்ட்டருடன் இணைக்க வேண்டும்.

கடைவீதிகளில் வணிகர்களும், வாடிக்கையாளர்களும் போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்களை நிறுத்த கூடாது. கடையின் பொருட்களை பார்வைக்காக சாலையில் வைத்தால் பறிமுதல் செய்யப்படும் என்று காவல்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டது.வணிகர் சங்க மாவட்ட தலைவர் மகேந்திரன் பேசுகையில், இரவு 11.30 மணி வரை அனைத்து கடைகளும் திறந்திருக்க அனுமதிக்க வேண்டும் என்றார். இதற்கு கோரிக்கையை பரிசீலித்து ஆவணம் செய்யப்படும் என்று காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு மாவட்ட தலைவர் மகேந்திரன், செயலாளர் சத்தியநாராயணன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். வணிக நிறுவனங்களில் சிசிடிவி கேமராக்களை அவசியம் பொருத்த வேண்டும். குறிப்பாக சாலை முழுவதும் இடைவெளி இல்லாமல் கேமராவில் பதிவாகுமாறு அமைக்க வேண்டும். கடைவீதிகளில் வணிகர்களும், வாடிக்கையாளர்களும் போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்களை நிறுத்த கூடாது.

Tags :
× RELATED ஒரத்தநாடு அருகே ஓய்வுபெற்ற எஸ்ஐ...