×

கூடலிவயல் காட்டாற்றில் தடுப்பணை கட்ட வேண்டும்

அதிராம்பட்டினம், ஆக. 13:  அதிராம்பட்டினம் அருகே மகிழங்கோட்டை கூடலிவயல் காட்டாற்றில் தடுப்பணை கட்ட வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதிராம்பட்டினம் அருகே மகிழகோட்டை பகுதியில் நீர் தட்டுப்பாட்டால் விவசாயம் பணிகள் பாதிக்கப்பட்டு வருகிறது. நிலத்தடி நீர் உயர்வதற்கான வாய்ப்பு குறைந்ததால் மழைநீரை நம்பி இருக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. இதனால் பெரும்பாலான விவசாயிகள், தென்னை சாகுபடிக்கு மாறிவிட்டனர். இப்பகுதியில் தற்போது 230 அடியிருந்து 250 அடி ஆழத்தில் நிலத்தடி நீர் மட்டம் உள்ளது.

நிலத்தடி நீர்மட்டம் உயரவதற்கான ஒரேஆராதமாக இந்த பகுதியில் அக்னி ஆறு, மகாராஜா சமுத்திரம் ஆறு  ஒன்று சேர்ந்து மகிழங்கோட்டை கூடலிவயல் வழியாக காட்டாறு கடலில் கலக்கிறது. மகிழங்கோட்டை கூடலிவயல் காட்டாற்று பகுதியில் தடுப்பணை கட்டினால் நிலத்தடி நீர்மட்டம் உயரும். மேலும் உப்புநீர் கலப்பதை தடுக்கலாம். எனவே மகிழங்கோடை கூடலிவயல் காட்டாற்றில் தடுப்பணை கட்ட வேண்டுமென தமிழக அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED கல்லணை அருகே பைக் மீது கார் மோதல் 3 பேர் காயம்