×

அதிகளவு தண்ணீர் திறந்து விடப்படுவதால் காவிரி கரையோர மக்களுக்கு தண்டோரா மூலம் அறிவிப்பு

கும்பகோணம்,  ஆக. 13: ஆறுகளில் அதிகளவு தண்ணீர் திறந்து விடப்படுவதால் கும்பகோணம் பகுதி  காவிரி கரையோர மக்களுக்கு தண்டோரா மூலம் அறிவிப்பு செய்யப்படுகிறது. அதிக  அளவில் தண்ணீர் திறந்து விடுவதால் கும்பகோணம் பகுதியில் உள்ள காவிரி  கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி வருவாய்த்துறையினர் ஆட்டோக்களில்  சென்று தண்டோரா மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். மேட்டூர்  அணையின் நீர்மட்டம் 2வது முறையாக நிரம்பியது. இதையடுத்து அணையில் இருந்து  1.25 லட்சம் கன அடிக்கு மேல் தண்ணீர் திறப்பதால் திருச்சி, தஞ்சை உள்ளிட்ட  12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இந்நிலையில்  கல்லணை வந்து சேரும் தண்ணீரை கொள்ளிடம் மற்றும் காவிரி ஆறுகளில் பிரித்து  அனுப்பப்படுகிறது. இதனால் ஆறுகளின் கரையோரம் வாசிக்கும் மக்கள் பாதுகாப்பாக  இருக்குமாகு கலெக்டர் அண்ணாதுரை எச்சரிக்கை விட்டுள்ளார். மேலும்  ஆறுகளில் இறங்கி குளிக்க வேண்டாம். கால்நடைகளை இறங்கி குளிப்பாட்ட  வேண்டாம். தங்களது குழந்தைகளை ஆற்றில் இறங்கி விளையாட அனுமதிக்க வேண்டாம்  என்பது உள்ளிட்ட பல்வேறு எச்சரிக்கையை மாவட்ட நிர்வாகம் விடுத்துள்ளது.

இந்நிலையில்  கும்பகோணம் சப்கலெக்டர் பிரதீப்குமார் உத்தரவின்பேரில்  வருவாய்த்துறையினர், கும்பகோணம் பகுதியில் உள்ள காவிரி கரையோரத்தில்  வசிக்கும் மக்களுக்கு பாதுகாப்பாக இருக்குமாறு எச்சரிக்கை விடுத்து  வருகின்றனர். குறிப்பாக காவிரி கரையோரம் உள்ள கருப்பூர், மணஞ்சேரி,  பெருமாண்டி, மேலகாவிரி உள்ளிட்ட பகுதிகளுக்கு வருவாய்த்துறையினர்  ஆட்டோக்களில் சென்று தண்டோரா போட்டு பாதுகாப்பாக வசிக்குமாறு தெரிவித்து  வருகின்றனர். மேலும் தங்களது கால்நடை, உடைமைகளை பாதுகாப்பாக வைத்து  கொள்ளுமாறு தெரிவித்து வருகின்றனர். கரைகளில் உடைப்பு ஏற்பட்டால் உடனே  தங்கள் பகுதி விஏஓவிடம் தகவல் தெரிவிக்க வேண்டுமென அறிவுரை வழங்கி  வருகின்றனர். தங்களது கால்நடை, உடைமைகளை பாதுகாப்பாக வைத்து கொள்ளுமாறு தெரிவித்து  வருகின்றனர். கரைகளில் உடைப்பு ஏற்பட்டால் உடனே தங்கள் பகுதி விஏஓவிடம்  தகவல் தெரிவிக்க வேண்டுமென அறிவுரை வழங்கி வருகின்றனர்.

Tags :
× RELATED ஒரத்தநாடு அருகே ஓய்வுபெற்ற எஸ்ஐ...