×

தினகரனுக்கு எதிராக கட்சியில் அதிருப்தி திவாகரன் மகன் ஜெய்ஆனந்த் பேட்டி

புதுக்கோட்டை, ஆக.13: புதுக்கோட்டையில் போஸ் மக்கள் பணியகத்தின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்ட போஸ் மக்கள் பணியக தலைவரும், அண்ணா திராவிடர் கழக பொதுச்செயலாளர் திவாகரன் மகனுமான ஜெய் ஆனந்த் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
திருவாரூர் மற்றும் திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் அண்ணா திராவிடர் கழகம் போட்டியிட வாய்ப்பு உள்ளது. திருவாரூரில் நடக்கும் இடைத்தேர்தலில் தலைமை உத்தரவிட்டால் நான் போட்டியிடுவேன்.  தினகரன், ஏழரை நாட்டு சனி எங்களுக்கு முடிந்து விட்டது என்று கூறியுள்ளார். எங்களுக்குத்தான் ஏழரை நாட்டு சனி முடிந்து விட்டது. ஆனால் அவருக்கு தொடங்கியுள்ளது. ஜெயலலிதா மறைவிற்கு பிறகு சசிகலா தினகரனிடம் பவர் செக்டாராக 122 எம்எல்ஏக்கள் மற்றும் கட்சியை ஒப்படைத்து விட்டு சென்றார்.

ஆனால் 18 எம்எல்ஏக்களை மட்டும் தங்கள் பக்கம் வைத்துக்கொண்டு கட்சியையும் ஆட்சியையும் இழந்து தனி கட்சி ஒன்றை தொடங்கி பவர் போய் தனியாக உள்ளவர் தான் தினகரன். தற்போது அவரது கட்சியிலேயே அவருக்கு எதிராக அதிருப்தி தலைதூக்கியுள்ளது.  ஆர்கே நகர் இடைத்தேர்தலில் தினகரன் ஒரு ஓட்டிற்கு 22 ஆயிரம் ரூபாய் மற்றும் டோக்கன் கொடுத்து வெற்றி பெற்றுள்ளார். இது போன்று செலவு செய்தால் ஒரு லட்சம் வாக்கு அல்ல 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறலாம். அதிமுகவை தினகரன் கைப்பற்றுவார் என்ற நம்பிக்கை இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags :
× RELATED அறிவொளி கருப்பையா தகவல் கட்சியினர் வீதிவீதியாக வாக்குசேகரிப்பு