×

10 நாட்களாக பொதுமக்கள் அவதி திருநள்ளாறு முதல் அம்பகரத்தூர் வரை சாலை அகலப்படுத்தி மேம்படுத்தும் பணி அடுத்த சில மாதங்களில் நிறைவு பெறும்

காரைக்கால், ஆக.13: காரைக்கால் திருநள்ளாறு தொகுதிக்குட்பட்ட முப்பைத்தங்குடி தெற்குத் தெருவில், தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலம் நடைபெறும் சாலை மற்றும் மதகு கட்டுமானம் உள்ளிட்ட பணிகளை, புதுச்சேரி வேளாண் அமைச்சர் கமலக்கண்ணன் ஆய்வு செய்தார். தொடர்ந்து, அமைச்சர் கமலக்கண்ணன் நிருபர்களிடம் கூறியது: பலர் எதிர்பார்க்கும் திருநள்ளாறு முதல் அம்பகரத்தூர் வரையிலான சாலை அகலப்படுத்தி மேம்படுத்தும் பணியும், திருநள்ளாறு சுப்ராயபுரம் சாலைப் பணியும் வேகமாக நடந்து வருகின்றது. இதுதவிர, திருநள்ளாறு தொகுதியில் பல்வேறு கிராமப்புறங்களில் சாலைப் பணிகளும் நடைபெற்று வருகின்றன. முப்பைத்தங்குடி சாலையானது வாய்க்காலின் குறுக்கே சிறிய மதகு கட்டுமானத்துடன் ரூ.8 லட்சம் செலவில் நடைபெறுகிறது.

திருநள்ளாறு கொம்யூன் பஞ்சாயத்து நிர்வாகத்தினர் மேற்பார்வையில் இந்தப் பணிகள் நடைபெறுகின்றன. அடுத்த ஒரு மாதத்தில் சாலைப் பணியும், மதகு கட்டுமானத்தையும் முடித்துவிடும் வகையில் பணிகள் நடைபெறுவதாக அதிகாரிகள் கூறினர். கொம்யூன் பஞ்சாயத்து நிர்வாகம் மூலம் நடைபெறும் அனைத்துப் பணிகளையும் குறித்த காலத்தில் நிறைவு செய்யத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அதிகாரிகளைக் கேட்டுக்கொண்டேன். அதே போல், திருநள்ளாறு முதல் அம்பகரத்தூர் வரையிலான சாலை அகலப்படுத்தி மேம்படுத்தும் பணி அடுத்த சில மாதங்களில் நிறைவு பெறும் வகையில் பணிகளை வேகப்படுத்த கேட்டுகொண்டுள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

Tags :
× RELATED பொறையாரில் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு தேர்தல் விழிப்புணர்வு முகாம்