×

புதிய மோட்டார் வாகன திருத்த சட்ட பணியால் ஆர்டிஓ அலுவலகத்தில் பதிவு, பர்மிட் புதுப்பித்தல் பணி முடக்கம்

மயிலாடுதுறை,ஆக.13: புதிய மோட்டார் வாகன திருத்தச்சட்டத்தின்படி வண்டியின் பதிவு, எப்.சி., லைசென்ஸ் வழங்குவது என அனைத்தும் தனியாரிடம் ஒப்படைக்கப்படும், வண்டிகளை குறிப்பிட்டகாலம் மட்டுமே ஓட்ட வேண்டும், பெர்மிட் வழங்கும் உரிமையை மாநில அரசிடமிருந்து மத்திய அரசு பறித்து கார்ப்பரேட்நிறுவனங்களிடம் ஒப்படைத்துவிடும். லட்சக்கணக்கான ஓட்டுனர் பயிற்சி பள்ளிகளை மூடும் ஆபத்தை உருவாக்கியுள்ளது, முற்றிலும் மோட்டர் தொழில் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு என மாற்றப்பட உள்ளது.மத்திய அரசு இதுபோன்ற காரியங்களுக்கு வசதியாக தமிழகம் எங்கும் வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் வெர்சன் 4 என்ற பணிக்காக கணினியில் அடிப்படை வேலைகள் நடைபெற்று வருகிறது.  
இந்த பணிகள் நடைபெற்றுவருவதால் கடந்த 10 தினங்களாக மயிலாடுதுறை சீர்காழி மற்றும் நாகை ஆகிய ஊர்களில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலம் மற்றும் துணை வட்டார போக்குவரத்து அலுவலங்களில் உள்ள அனைத்துப்பணிகளும் முடங்கி கிடக்கிறது.

வாகனப்பதிவு, புதிய பதிவு, பெர்மிட் புதுப்பித்தல், வருடா வருடம் கட்டக்கூடிய வாகன வரி, டாக்சி வைத்திருப்போர் கட்டவேண்டிய தொகை, வெளியூருக்கு செல்லும்போது மற்ற மாநிலத்தை கடக்க வேண்டுமானால் அதற்கான வாகன நுழைவு வரியை 20 தினங்களுக்கு முன்பே செலுத்த வேண்டும். அந்த பணி, வாகனத்தை மற்றவர் பெயருக்கு மாற்றுவது, கடன் தவனை முடிந்தபிறகு மாற்றுப்பதிவு, விற்ற வானத்திற்கு பெயர் மாற்றுதல், எப்சி. போன்ற பணிகள் என அனைத்தும் முடங்கிக்கிடக்கிறது. டாக்சி வைத்திருப்போர் வெளியூர் செல்ல பயணிகளை அைழத்து செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். புதிய வெர்சன் மாற்றப்படும்போது சிக்கல் வரும் என்று தெரிந்திருந்தும் மாற்று ஏற்பாடு செய்யாமல் அலட்சியமாக போக்குவரத்துத்துறை செயல்படுகிறது, இதுகுறித்து ஓய்வுபெற்ற போக்குவரத்து அலுவலர் சங்கர் கூறுகையில்,’ மத்திய அரசு போடும் சட்டத்தால் வேலை எளிமையாகும்,

எல்லாம் ஆன்லைனிலேயே முடிக்கும் நிலை வரும், சிறுசிறு வாகன ஓட்டுனர், பயிற்சிப்பள்ளி நடத்துவோர் கடுமையாக பாதிக்கப்படுவார்கள், ஏற்கனவே கடந்த 2 மாதத்திற்கு முன் கனரக வாகனம் ஓட்டுனர் பயிற்சி பள்ளிகள் மூடப்பட்டுவிட்டது, இந்த நேரத்தில் இந்த புதியப்பணி போக்குவரத்து அலுவலகத்தில் நடைபெற்றவரும் போது மேலதிகாரிகள் முன்வந்து மாற்று ஏற்பாடு செய்திருக்கலாம், எதை எதையோ பொறுத்துக்கொள்ளும் மக்கள் இதையும் பொறுத்துக்கொள்ளட்டும் என்ற அதிகாரிகளின் அலட்சியம்தான் காரணமாகும். அரசுக்கும், அதிகாரிகளுக்கும், ஆளுங்கட்சியினருக்கும் வருமானம் கொட்டும் காமதேனுவாக உள்ளது, பத்திரப்பதிவுதுறை மற்றும் வட்டார போக்குவரத்துத்துறை ஆனால் பொதுமக்களது சிரமத்தை மட்டும் கண்டு கொள்ளமாட்டார்கள் என்றார்.

Tags :
× RELATED காவலர்கள், அரசு அலுவலர்கள் அஞ்சல் வாக்குப்பதிவு: அதிகாரிகள் ஆய்வு