×

சிலைகள் கொள்ளையை தடுக்க கோயில் உண்டியல்களில் மனு போடும் நூதன போராட்டம்

காரைக்கால், ஆக.13: கோயில் சிலைகள், நகைகள் கொள்ளைப்போவதை தடுக்கும் பொருட்டு, மாவட்ட இந்து முன்னணி சார்பில், கோயில் உண்டியல்களில் மனு போடும் போராட்டம் நேற்று தொடங்கியது. கோயில் சிலைகள், நகைகள், குளங்கள் மற்றும் பிற பொருட்கள் கொள்ளைப்போவதை தடுக்கவும், நம் சாமி, நம் கோயில், இதை நாம்தான் காக்க வேண்டும். கோயிலை நாம் காத்தால், நம்மை கடவுள் காப்பார் என்ற விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தும் பொருட்டு, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள இந்து கோயில்களில் இந்துக்கள் குடும்பத்தோடு சென்று உண்டியலில் மனு சமர்ப்பிக்கும் போராட்டம் நேற்று தொடங்கப்பட்டது. காரைக்கால் அம்மையார் கோயில் வளாகத்தில் நடைபெற்ற இந்த நூதன போராட்டத்திற்கு, மாவட்ட இந்து முன்னணி தலைவர் விஜயன் தலைமை வகித்தார்.

நிர்வாகிகள் வெங்கடாச்சலம், சிவானந்தம், செந்தில்குமார், ராஜேந்திரன், தென்னரசு, பாலாஜி மற்றும் பலர்குடும்பத்தோடு சென்று உண்டியலில் மனு எழுதி போட்டனர். தொடந்து, அனைத்து கோயில்களிலும் மனு எழுதி போடும் போராட்டம் நடைபெறும் என, மாவட்ட இந்து முன்னணி தலைவர் விஜயன் தெரிவித்துள்ளார். சீர்காழி:  இதே கோரிக்கையை வலியுறுத்தி சீர்காழி நாகேஸ்வரமுடையார் கோயிலில் இந்து முன்னணி நாகை மாவட்ட செயலாளர் பாண்டியன் தலைமையில் நிர்வாகிகள் கோயில் பூசாரியிடம் மனு ஒன்றை கொடுத்து அதனை சுவாமி பாதங்களில் வைக்க கேட்டுகொண்டனர்.

Tags :
× RELATED கோடை வெயில் சுட்டெரிப்பதால் இளநீர்,...