×

வேளாங்கண்ணி பேராலய ஆண்டு திருவிழாவுக்கு வரும் பாதயாத்திரை பக்தர்கள் ஓய்வெடுக்க கருவேலங்கடையில் ஆலயம் திறப்பு

நாகை, ஆக.13: வேளாங்கண்ணி பேராலய ஆண்டு திருவிழாவிற்கு பாதயாத்திரையாக வரும் பக்தர்கள் ஓய்வெடுக்க கருவேலங்கடையில் ஆலயம் ஒன்று நேற்று திறக்கப்பட்டது. நாகை மாவட்டம், வேளாங்கண்ணி தூய ஆரோக்கிய மாதா பேராலய ஆண்டுத்திருவிழா வருகிற 29ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. விழாவில் கலந்துகொள்வதற்காக திருச்சி, புதுக்கோட்டை, அரியலூர், ஜெயங்கொண்டம், திருவாரூர், தஞ்சாவூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வர உள்ளனர்.

பாத யாத்திரையாக வரும் பக்தர்கள் தங்கி ஓய்வெடுப்பதற்காக வேளாங்கண்ணி பேராலயம் சார்பில், நாகை ஒன்றியம் கருவேலங்கடையில் புனித அந்தோணியார் சிலையுடன் ஆலயம் ஒன்று கட்டப்பட்டுள்ளது. நேற்று நடந்த, ஆலய திறப்பு விழாவிற்கு தலைமை வகித்து தஞ்சை மறை மாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் அடிகளார் திறந்து வைத்தார். பின்னர் நடந்த சிறப்பு திருப்பலியில், வேளாங்கண்ணி பேராலய அதிபர் பிரபாகரன் அடிகளார், பங்குத்தந்தை சூசைமாணிக்கம் அடிகளார், பேராலய பொறுப்பாளர் யாகப்பா ராஜரத்தினம் அடிகளார், உதவி பங்குத்தந்தைகள் டேவிட் தன்ராஜ் அடிகளார், ஆண்டோ ஜெயராஜ் அடிகளார் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Tags :
× RELATED மயிலாடுதுறை பொறையாரில் நிவேதாமுருகன் எம்எல்ஏ வாக்களித்தார்