×

திருக்கடையூரில் பந்தாடப்பட்டு வரும் ஆவின்பாலகம்: மாற்று இடம் தராமல் அலைக்கழிப்பு

தரங்கம்பாடி, ஆக.13: திருக்கடையூரில் பொது கழிப்பிடம் அருகிலிருந்து மாற்றப்பட்டு, பின்னர் போக்குவரத்துக்கு இடையூறு என வேறு ஒரு இடத்திலிருந்து இடித்து அகற்றப்பட்ட ஆவின் பாலகத்திற்கு மாற்று இடம் கொடுக்காமல் அலைக்கழிக்கப்பட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது.
 நாகை மாவட்டம், திருக்கடையூர் பஸ் நிலையம் அருகில் இருந்த ஆவின் பாலகத்தை சிறிது தூரத்தில் உள்ள பொதுக்கழிப்பிடம் சுகாதாரமற்ற நிலையில் இருப்பதாக கூறி வேறு இடத்திற்கு மாற்றுமாறு அறிவுறுத்தி அகற்றப்பட்டது. ஆனால், இதுநாள் வரை மாற்று இடம் கொடுக்காமல் அலைகழிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. திருக்கடையூர் அருகில் உள்ள திருமெய்ஞானம் கிராமத்தை சேர்ந்த ராஜன் என்பவரின் மனைவி மோகனா. 2015ல் அனுமதி பெற்று ஆவின் பாலகம் நடத்தி வந்தார்.

ஆவின் பாலகத்திற்கு அருகே பொதுக்கழிப்பிடம் ஒன்று உள்ளது. பொதுக்கழிப்பிடத்தை சுகாதாரமாக வைத்துக்கொள்ள வேண்டிய சுகாதாரத்துறை பொதுக்கழிப்பிடத்தை சுகாதாரமாக வைத்து கொள்ளாமல் அது சுகாதாரமற்ற நிலையில் இருப்பதாக கூறி வேறு இடத்திற்கு பாலகத்தை மாற்ற கடந்த மே மாதம் இவர்களுக்கு கடிதம் எழுதியது. அதை தொடர்ந்து ஆவின் பாலகம் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயில் மேலவீதியில் அமைத்துக்கொள்ள செம்பனார்கோவில் வட்டார வளர்ச்சி அலுவலகம் மே 16ம் தேதி அனுமதி கடிதம் அளித்தது. ஆனால், அந்த இடத்திலும் ஆவின் பாலகம் அமைக்கவிடாமல் போக்குவரத்துக்கு இடையூராக இருப்பதாக கூறி கடந்த ஜூலை 11ம் தேதி திருக்கடையூரில் ஆக்கிரமிப்புகள் அகற்றும்போது ஆவின் பாலகம் நடத்த அமைக்கபட்டிருந்த இடத்தையும் இடித்து தள்ளிவிட்டனர். அப்போது தரங்கம்பாடி தாசில்தாராக இருந்த ஸ்ரீதர், ஆவின் பாலகம் அமைக்க மாற்று இடம் தருவதாக உறுதியளித்தார்.

ஆனால் இதுநாள் வரை மாற்று இடம் கொடுக்காமல் ஆவின் பாலகம் நடத்தி வந்த பெண் அலைக்கழிக்பட்டு வருகிறார். அனுமதி தர வேண்டிய ஊராட்சி ஒன்றிய ஆணையரும் மாற்று இடம் கொடுக்காமல் காலதாமதப்படுத்தி வருகிறார். ஒரு அரசு நிறுவனமான பாலகத்தின் அனுமதி பெற்ற முகவருக்கே கடை நடத்த இடம் கொடுக்காமல் அரசு அதிகாரிகள் அலட்சியபடுத்தி வருவது திருக்கடையூர் மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. போக்குவரத்துக்கு இடையூராக இருப்பதாக கூறி கடந்த ஜூலை 11ம் தேதி திருக்கடையூரில் ஆக்கிரமிப்புகள் அகற்றும்போது ஆவின் பாலகம் நடத்த அமைக்கபட்டிருந்த இடத்தையும் இடித்து தள்ளிவிட்டனர்.

Tags :
× RELATED ஆட்டம் பாட்டத்துடன் நடந்த அனல் பறக்கும் பிரசாரம் ஓய்ந்தது