×

குள்ளனூர் மாரியம்மன் கோயில் விழா

போச்சம்பள்ளி, ஆக 13: குள்ளனூர் மாரியம்மன் கோயில் விழாவை யொட்டி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகில் குள்ளனூர் கிராமத்தில் பிரசித்திபெற்ற மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆடி மாத விசேஷ  நாட்களில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வருகிறது.

கடந்த அமாவாசை நாளன்று அதிகாலை முதல் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டன. பெண்கள் கோயில் முன்பாக  பொங்கல் வைத்து வழிபட்டனர். குள்ளனூரை சேர்ந்த கேட்நாகராஜ்மல்லிகா குடும்பத்தை சேர்ந்தவர்கள் அம்மனுக்கு தங்க நகையை காணிக்கையாக வழங்கினர்.  அதனை தொடர்ந்து ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் சுற்றுவட்டார கிராமத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED விழிப்புணர்வு பிரசாரம்