×

அப்புறப்படுத்த கோரிக்கை ஆசை வார்த்தை கூறி இளம்பெண்ணை கர்ப்பமாக்கியவர் கைது

கரூர், ஆக. 13: கரூர் அருகே இளம்பெண்ணை ஆசை வார்த்தை கூறி கர்ப்பமாக்கிய வாலிபரை அனைத்து மகளிர் போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர். கரூர் கேஎம்சி காலனியை சேர்ந்த 17 வயது இளம்பெண் கரூரில் உள்ள ஒரு கொசுவலை நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இதே பகுதியை சேர்ந்த 21வயது மதிக்கத்தக்க வாலிபர், இளம்பெண்ணிடம் நைசாக பேசி, திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி, உல்லாசமாக இருந்துள்ளார். இதனால் இளம்பெண் கர்ப்பமடைந்தார். தற்போது திருமணம் செய்து கொள்ள மறுத்ததால் 8 மாத கர்ப்பிணியாக உள்ள அந்த இளம்பெண்ணின் தாய் இதுகுறித்து அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் அடிப்படையில், போலீசார் வாலிபரை கைது செய்து விசாரிக்கின்றனர். வாகன விபத்து: கரூர் மாவட்டத்தின் எல்லை பகுதியாக வேலாயுதம்பாளையம் உள்ளது. இதில், காவிரி ஆற்றின் அருகே எஸ்பி உத்தரவின்பேரில், புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று அதிகாலை 1 மணியளவில், நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் இருந்து வீரப்பூர் கோயில் நோக்கி ஒரு வேன் வந்தது. வேனில் 10க்கும் மேற்பட்டோர் இருந்தனர். இந்த வேன் புறக்காவல் நிலையம் எதிரே பேரிகார்டு பகுதியை நோக்கி வேகமாக வந்தபோது, திடீரென வேன் பேரிகார்டில் மோதி, புறக்காவல் நிலைய வாசல் இழுத்து சென்றது. அப்போது பணியில் இருந்த போலீசார் காவல்நிலையம் உள்ளே இருந்ததால் எவ்வித காயமின்றி தப்பினர். இந்த விபத்து குறித்து வேலாயுதம்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர். மது பதுக்கி விற்ற 3பேர் கைது: தோகைமலை காவல் சரகம் கல்லடை அண்ணா நகரில் வசிக்கும் ராமலிங்கம் (45) மற்றும் கணபதி (47) ஆகியோர் தாங்கள் நடத்தி வரும் பெட்டிக்கடைகளில் அரசு அனுமதியின்றி மதுபானங்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்தனர். இதே போல் கள்ளையில் ராஜலிங்கம் (65) என்பவர் தனது பெட்டிக்கடையில் அனுமதியின்றி மதுபானங்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்தார்.

தோகைமலை போலீசார் ஆய்வு செய்ததில் மூவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மதுபானங்களும் பறிமுதல் செய்யப்பட்டது. விபத்தில் தொழிலாளி பலி: கரூர் மாவட்டம், பஞ்சப்பட்டியை அடுத்த கீரனூரை சேர்ந்தவர் ஆறுமுகம் (65). தற்போது இவர் பரளியில் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு கரூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மாட்டுவண்டியில் சாலையை கடக்கும் போது கரூரில் இருந்து திருநள்ளாறு நோக்கி சென்ற வேன் மோதியதில் அருகில் இருந்து பள்ளத்தில் மாட்டுவண்டி கவிழ்ந்தது. இதில் இரண்டு மாடுகளும், ஆறுமுகமும் சம்பவ இடத்தில் இறந்தனர். இதுகுறித்து குளித்தலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags :
× RELATED ஆத்ம நேச ஆஞ்சநேயர் கோயிலில் ராம நவமி விழா