×

நகர கூட்டுறவு சங்கத்தில் தலைவர், துணை தலைவர் தேர்வு

தர்மபுரி, ஆக.13: தர்மபுரி நகர கூட்டுறவு சங்கத்தில் தலைவர், துணைத்தலைவர்கள் தேந்தெடுக்கப்பட்டுள்ளனர். தர்மபுரி நகர கூட்டுறவு சங்கத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர். ஆண்டுக்கு பல கோடி வர்த்தகம் நடக்கிறது. 11 இயக்குனர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மூலம் தலைவராக முன்னாள் நகரமன்ற தலைவர் எஸ்.ஆர்.வெற்றிவேல் நகர கூட்டுறவு சங்கத்தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். துணைத்தலைவராக குருநாதன் தேர்ந்தெடுக்கப்பட்டார். தேர்தல் அலுவலர் ராஜாமணி பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்கத்தின் இயக்குனர்கள் இன்பரசு, செந்தில்வேல், நாகேந்திரன், கோபால், மங்கம்மாள், கலைவாணி, அமுதவள்ளி, சுருளிநாதன், சந்திரமோகன், மேலாண்மை இயக்குனர் ராமையா, பொதுமேலாளர் இளங்கோ மற்றும் தொழிலதிபர் அண்ணாதுரை, பூக்கடை ரவி, அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் பழனிசாமி, ஆசிரியர் எஸ்ஏ சின்னசாமி, ஜப்பார், பலராமன், மாது, விஜயகுமார், நாகராஜ், வங்கி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இலக்கியம்பட்டியில் கடும்போட்டி: வெண்ணாம்பட்டியில் இலக்கியம்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில், 4 ஆயிரம் உறுப்பினர்கள் உள்ளனர். ஆண்டுக்கு ₹5 கோடி அளவில் வர்த்தகம் நடக்கும் இச்சங்கத்திற்கு 11 இயக்குனர்கள் தேர்வு செய்யப்பட்டனர். நேற்று முன்தினம் தலைவர், துணை தலைவர் தேர்வு தேர்தல் நடந்தது. இதில் திமுகவுக்கும், அதிமுகவுக்கும் கடும் போட்டி நிலவியது. ஒருகட்டத்தில் தேர்தல் அதிகாரி எழுந்து சென்றார். ஆளும்கட்சியினரின் அதிகாரத்தில் தலைவர், துணைத்தலைவர் தேர்வு செய்யப்பட்டனர். தலைவர் பதவிக்கு நடந்த கடும் போட்டியால் வெண்ணாம்பட்டியில் பரபரப்பு ஏற்பட்டது.

தர்மபுரி ஒன்றியம் செம்மாண்டகுப்பம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில், 4 ஆயிரம் உறுப்பினர்கள் உள்ளனர். ஆண்டுக்கு ரூ. 1 கோடிக்கு வர்த்தகம் நடக்கிறது. இந்த சங்கத்திற்கு நிர்வாக குழு உறுப்பினர்களாக 11பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதில், தலைவர் பதவிக்கு சரவணன், துணைத் தலைவர் பதவிக்கு கோவிந்தராஜ் ஆகியோர் போட்டியிட்டனர். எதிர் தரப்பில் போட்டியிட ஆள் இல்லாததால், சரவணன், கோவிந்தராஜ் ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

Tags :
× RELATED திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேக பெருவிழா