×

காப்பீடு திட்டத்துடன் ஆதார் இணைப்பு பணி ரூ.4.35 லட்சம் மோசடி செய்த 3 பேர் மீது போலீசில் புகார்

மதுரை, ஆக. 13: காப்பீடு திட்டத்துடன் ஆதார் இணைப்பு பணி ெசய்ததற்கு தர வேண்டிய ரூ.4.35 லட்சத்தை தராமல் மோசடி செய்த சப்-ஏஜெண்டுகள் 3 பேர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, போலீஸ் கமிஷனரிடம் புகார் செய்யப்பட்டுள்ளது.
மதுரை ஆரப்பாளையம் கண்மாய்க்கரையை சேர்ந்தவர் சபரிநாதன். இவர் போலீஸ் கமிஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதத்திடம் புகார் மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:  கம்ப்யூட்டர் டேட்டா என்ட்ரி பிராசஸ் பணியை பிரைவேட்டாக செய்து வருகிறேன். என்னிடம் கடந்த 2017ம் ஆண்டு ஜனவரியில் மதுரை பீபிகுளம் மூவேந்தர் தெருவை சேர்ந்த ஆறுமுகம் (33), சப்பாணி கோயில் தெருவை சேர்ந்த கார்த்திக்குமார் (40), ஆறுமுகத்தின் தந்தை சேது (56) ஆகியோர் அறிமுகமாகினர்.  இவர்கள் டேட்டா மானேஜ்மெண்ட் சர்வீசஸ் நடத்துவதாகவும், அதில் சைல்டு ஆதார் என்ட்ரோல்மெண்ட் பிராசஸ் என்ற அரசு புராெஜக்ட் செய்து வருவதாகவும், அதே திட்டப்பணியை நெல்லை மாவட்டத்தில் எனக்கு பெற்றுத்தருவதாகவும் கூறினர். அந்த புராஜக்ட் ெசய்ய மொபைல் டேட்லெட், டிவைசஸ் வாங்க ரூ.1.25 லட்சம் செலுத்துமாறு கூறினர். அதனை நம்பி, பணம் கொடுத்தேன். வேலையையும் துவங்கினேன். அப்போது அந்த புராெஜக்ட் ஏற்கனவே முடிவடைந்து விட்டது என கூறினர். இது குறித்து ஆறுமுகம், கார்த்திக்குமாரிடம் கேட்ட போது, வேறு புராெஜக்ட் ெபற்றுத்தருவதாக கூறினர்.


இதன் பின் 3 மாதங்களுக்கு பின் 2017ம் ஆண்டு மே மாதம் காப்பீட்டு திட்டத்துடன் ஆதார் இணைப்பு பணியை செய்து தரும்படி என்னிடம் கேட்டுக்கொண்டனர். அப்பணிக்காக 30 ஆபரேட்டர்களை ஈடுபடுத்தி வேலை செய்தேன்.  4 மாதங்கள் பணி முடிவடைந்த பின்பு, 2 பேரும் எந்த தொகையும் தரவில்லை. எனக்குத்தர வேண்டிய ரூ.1.25 லட்சம், புராெஜக்ட் முடித்ததற்கான தொகை ரூ.3.50 லட்சம் ஆகியவற்றுக்கு 7 காசோலைகள் கொடுத்தனர். காசோலைகளை வங்கியில் போட வேண்டாமென்றும், நவம்பருக்குள் பணம் கொடுத்து விடுவதாகவும் கூறினர். ஆனால், பணம் தரவில்லை. கேட்ட போது சிறிது சிறிதாக ரூ.50 ஆயிரத்திற்கு காசோலை தந்தனர். அதில் ரூ.10 ஆயிரத்திற்குரிய காசேலைக்குரிய பணத்தை 2018 பிப்ரவரி இறுதிக்குள் தருவதாக கூறிய இவர்கள், இதுவரை தர வேண்டிய ரூ.4.35 தராமல் மோசடி செய்து விட்டனர். இதுகுறித்து கரிமேடு காவல் நிலையத்தில் புகார் செய்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. எனவே, எனக்கு தர வேண்டிய பணத்தை கொடுக்காமல் மோசடி செய்த 3 பேர் மீதும் நடவடிக்கை எடுத்து, பணத்தை ெபற்றுத்தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் அதில் கூறியிருந்தார்.

Tags :
× RELATED உசிலம்பட்டி அருகே பள்ளத்தில் சரிந்த...