×

விளையாட்டு போட்டிகள் துவக்கம்

வத்தலக்குண்டு, ஆக. 13: 17 ஊராட்சிகளில் 13 நாள் நடைபெறும் கிராம அளவிலான விளையாட்டுப் போட்டிகள் இன்று 13ந் தேதி தொடங்குவதாக வட்டார வளர்ச்சி அலுவலர் தெரிவித்துள்ளார். கணவாய்ப்பட்டியில் தொடங்கும் போட்டிகளில் கால்பந்து, கைபந்து, கபாடி உள்பட பல்வேறு போட்டிகள் 25ந் தேதி வரை நடக்கிறது. அதற்கான ஏற்பாடுகளை ஊராட்சி செயலாளர்கள் செய்து வருகின்றனர். இத்தகவலை வத்தலக்குண்டு ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயசந்திரிகா தெரிவித்தார்.





Tags :
× RELATED இன்று வாக்குச்சாவடிக்கு சென்று...