×

மஞ்சநாயக்கன்பட்டி உச்சிமாகாளியம்மன் கோவிலில் பெண் பக்தர்கள் பால்குடம் காவடி எடுத்து நேர்த்திக்கடன்

ஒட்டன்சத்திரம், ஆக. 13: திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே உள்ள மஞ்சநாயக்கன்பட்டியில்  உச்சிமாகாளியம்மன் கோவில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஆடி கடைசி வெள்ளியை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான பெண்கள் பால்குடம், காவடி எடுத்து உச்சிமாகாளியம்மனுக்கு அபிஷேகம் செய்வது வழக்கம். இதற்காக கடந்த வெள்ளியன்று காலை சுமார் ஸ்ரீவேணுகோபாலசுவாமி திருக்கோவிலிலிருந்து பூனம்பட்டி ஆதினம் திருமடம், ஸ்ரீலஸ்ரீ ச.நடராஜ சுவாமிகள் தலைமையிலும், புலவர் ப.சின்னச்சாமி முன்னிலையிலும் ஆயிரக்கணக்கான பெண்கள் பால்குட காவடி எடுத்து ஊர் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக வந்து, உச்சிமாகாளியம்மனுக்கு பால் அபிஷேகம் நடத்தினார்கள்.

அதன் பின்பு உச்சிமாகாளியம்மனுக்கு மகா அபிஷேகம், அலங்கார பூஜை மற்றும் அன்னதானம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பழனி, ஒட்டன்சத்திரம், சத்திரப்பட்டி, திண்டுக்கல், மஞ்சநாயக்கன்பட்டி, வீரக்காவலசு ஆகிய ஊர்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனர்.


Tags :
× RELATED காட்டு மாடு தாக்கி மாணவன் காயம்