×

ஆடி வெள்ளியை முன்னிட்டு திருமலைக்கேணியில் ஆடி அமாவாசை விழா

நத்தம், ஆக. 13: திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணியசுவாமி கோயிலில் ஆடி அமாவாசையையொட்டி விழா நடந்தது. இதில் முருகபெருமானுக்கு பால், பழம், பஞ்சாமிர்தம், சந்தனம், புஷ்பம் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்கள் நடந்தது. தொடந்து ராஜாங்க திருக்கோலத்தில் பக்தர்களுக்கு சுப்பிரமணியசுவாமி காட்சி தந்து அருள்பாலித்தார். சுற்று வட்டாரங்களிலும் வெளிமாவட்ட பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வந்து நெய் விளக்கேற்றி சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து அருகில் உள்ள காமாட்சி மௌனகுருசாமி ஜீவசமாதி மடத்தில் மழை வேண்டி கூட்டு வழிபாடு நடந்தது. பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

வத்தலக்குண்டு:  நிலக்கோட்டை அருகே அணைப்பட்டியில் உள்ள பிரசித்திபெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இந்த கோவிலையொட்டி வைகை ஆறு ஓடுவதால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கானோர் அணைப்பட்டி வந்து, வைகை ஆற்றில் நீராடிய பின் ஆஞ்சநேயரை தரிசித்து சென்றனர்.கடந்தாண்டு ஆற்றில் தண்ணீர் வராததால் ஏமாற்றமடைந்த பக்தர்கள், இந்த ஆண்டு மகிழ்ச்சியுடன் திரும்பினர்.

Tags :
× RELATED வெயிலின் தாக்கத்தால் குளத்தில் செத்து மிதந்த மீன்கள்