×

மாவட்டம் குற்ற சம்பவங்களை தடுக்க பழநியில் கண்காணிப்பு காமிரா

பழநி, ஆக. 13: குற்ற சம்பவங்களை தடுக்க பழநி நகரில் காவல்துறையினர் கண்காணிப்பு காமிராக்களை பொருத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். கோயில் நகரான பழநிக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்நகரில் கடந்த சில மாதங்களாக நடந்து சென்ற பெண்களிடம் நகை பறிப்பது, வாகனங்களின் கண்ணாடிகளை உடைத்து பொருட்களை திருடுவது போன்ற சம்பவங்கள் அதிகளவில் நடந்து வருகின்றன. இதனை தடுக்க போலீசார் தீவிர ரோந்துப்பணி மேற்கொண்டனர். எனினும், கடந்த சில மாதங்களாக நகை பறிப்பு மற்றும் திருட்டு போன்ற சம்பவங்கள் அதிகளவில் நடந்து வருகின்றன.இதனை தடுக்க நகர் முழுவதும் கண்காணிப்பு காமிராக்கள் பொருத்த வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதன் காரணமாக நகர் முழுவதும் சுமார் 100 கண்காணிப்பு காமிராக்களை போலீசார் பொருத்தி வருகின்றனர். பஸ் நிலையம், அடிவாரம், சன்னதி வீதி, அருள்ஜோதி வீதி, காந்தி மார்க்கெட், புது தாராபுரம் சாலை, பழைய தாராபுரம் சாலை, ரயில்வே பீடர் சாலை, சக்தி கல்யாண மண்டபம் மற்றும் பல்வேறு இடங்களில் ரகசியமாக கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளனர். இந்நடவடிக்கையால் குற்றவாளிகளை எளிதில் அடையாளம் காணும் வாய்ப்பு ஏற்பட்டிருப்பதால் போலீசார் மகிழ்ச்சியடைந்தனர். போலீசாரின் இந்நடவடிக்கையால் பொதுமக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.




Tags :
× RELATED இன்று வாக்குச்சாவடிக்கு சென்று...