×

ஆடி கடைசி வெள்ளியை முன்னிட்டு 108 திருவிளக்கு பூஜை பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் முப்பெரும்விழா

வேடசந்தூர், ஆக. 13: திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரில் தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர்கள் முப்பெருவிழா நடைபெற்றது.விழாவிற்கு மாவட்ட தலைவர் ராஜாக்கிளி தலைமை வகித்தார். பட்டத் தலைவர் வெங்கடேஷ் வரவேற்றார். சந்திரசேகரன், அய்யாகண்ணு, கிருஷ்ணதாஸ், காஜாமைதீன், நாச்சிமுத்து, மாரிமுத்து, ஆண்டிவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட அலுவலகத்தை மாநில தலைவர் மகேந்திரன் திறந்து வைத்தார்.

முன்னதாக மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி மறைவுக்கும், கேரளா மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் உயிரிழந்த மக்களுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானங்கள் நிரைவேற்றினர். 1200 பேர் பதவி உயர்வு மற்றும் பணி ஓய்வு பெற்று சென்றுள்ளனர். இந்த காலிபணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று தமிழக அரசு உடனடியாக இரண்டாம் கட்ட பொதுமாறுதல் கலந்தாய்வு நடத்த வேண்டும். தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம் வலியுறுத்துகிறது. நிறைவாக மாவட்ட கல்வி அலுவலர் சமூக ஆர்வலர், பதவி உயர்வு, பணி ஓய்வு பெற்றவர்களுக்கு பரிசு சான்றிதழ்கள் வழங்கினர்கள். இவ்விழாவில் மாநில சிறப்புத்தலைவர் சுப்பிரமணி, சுந்தரமூர்த்தி, ஜான் உபால்ட், ராஜா, வீரமணி, அமல்ராஜ் மற்றும் பட்டதாரி ஆசிரியர் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED திருக்குறுங்குடி அழகியநம்பிராயர் கோயிலில் வசந்த உற்சவம்