×

வி.கே.புரம் நகர கூட்டுறவு சங்க தேர்தலில் புதிய நிர்வாகிகள் தேர்வு

வி.கே.புரம், ஆக. 13: வி.கே.புரம் நகர கூட்டுறவு கடன் சங்கத்தில் இயக்குநர் தேர்தல் நடந்தது. இதில் பாபநாசம் தொழிலாளர் சங்கம் சார்பில் போட்டியிட்ட எபனேசர், லட்சுமணன், மாரியப்பன், மதிவாணன், ராமரத்தினம் உலகநாதன் ஆகிய 6 பேரும் வெற்றிபெற்றனர். அதே சங்கத்தில் போட்டியிட்ட பெண் வேட்பாளர்கள் சோமசுந்தரி, சுப்புராமலட்சுமி, வல்சகுமாரி மற்றும் ஆதி திராவிட வேட்பாளர்கள் கணேசன், ஜெகநாதன் ஆகிய 5பேரும் போட்டியின்றித் தேர்வாகினர். இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் நடந்த தலைவர், துணைத்தலைவர் தேர்தலில் தலைவராக மதிவாணனும், துணைத்தலைவராக ராமரத்தினமும் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டனர்.


Tags :
× RELATED சிவகிரியில் பைக்கில் கடத்திய புகையிலை பொருட்கள் பறிமுதல்