×

குப்பைக்குழியில் புதைக்கப்பட்ட பச்சிளம்குழந்தை உடல் மீட்பு

நெல்லை, ஆக. 13: தேவர்குளம் அருகேயுள்ள வன்னிகோனேந்தல் குளக்கரையில் உள்ள  குப்பை குழியில் தொப்புள்கொடிகூட காயாத நிலையில் ஆண் குழந்தை ஒன்று புதைக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் அளித்த தகவலை அடுத்து விரைந்துசென்ற  தேவர்குளம் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஜீன்குமார் மற்றும் போலீசார் உடலை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இதில் பிறந்து இருநாட்களே ஆன நிலையில் அந்த குழந்தையின் உடல்  மர்ம நபர்களால் புதைக்கப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து உடலை பரிசோதனைக்கு நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்த போலீசார், வன்னிகோனேந்தல் விஏஓ மாரியப்பன் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிந்து மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.



Tags :
× RELATED பெண்ணுக்கு மிரட்டல் விடுத்த வாலிபர் கைது