×

கீழக்கடையம் துவக்க பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டிடம்

கடையம், ஆக. 13: கீழக்கடையம் டிடிடிஏ துவக்கபள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டிடத்தை விஜிலா சத்தியானந்த் எம்பி திறந்துவைத்தார். திருநெல்வேலி திருமண்டலம், கடையம் சேகரம், கீழக்கடையம் டிடிடிஏ துவக்கப் பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் கட்ட விஜிலா சத்தியானந்த் எம்பி, தனது உள்ளூர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.10 லட்சம் ஒதுக்கீடு செய்தார். அதன்பேரில் கட்டப்பட்ட கூடுதல் வகுப்பறை கட்டிடத் திறப்பு விழா நேற்று நடந்தது. நெல்லை அதிமுக புறநகர் மாவட்டச் செயலாளர் பிரபாகரன் எம்.பி. தலைமை வகித்தார்.

அதிமுக கடையம் ஒன்றியச் செயலாளர் அருள்வேல்ராஜ் வரவேற்றார். திருநெல்வேலி திருமண்டல  தலைவர் பொறுப்பு பில்லி, பொருளாளர் தேவதாஸ் ஞானராஜ் , பாளை டிடிடிஏ தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் மேலாளர் ஐடிஎஸ் ஆபிரகாம், மத்திய சபை மன்றத் தலைவர் பீற்றர் தேவதாஸ், மேற்கு சபை மன்ற தலைவர் சற்குணம் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற விஜிலா சத்தியானந்த் எம்பி. கூடுதல் வகுப்பறை கட்டிடத்தைத் திறந்துவைத்தார். விழாவில் திருமண்டல பெருமன்ற உறுப்பினரான மேட்டூர் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத் தலைவரும், கடையம் பெரும்பத்து அதிமுக ஊராட்சி செயலாளருமான ஆசீர்வாதபுரம்  ராஜன், டிசி மெம்பர் ஜெயராஜ், கடையம் சேகரத் தாளாளர் மற்றும் திருப்பணிவிடையாளர் விக்டர் ஆரோக்கியராஜ் தனசிங் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags :
× RELATED தென்காசியில் ராம் நல்லமணி யாதவா கல்லூரி பட்டமளிப்பு விழா