×

கீழவைப்பார் தூயமோட்ச அலங்கார அன்னை ஆலய திருவிழா கொடியேற்றம்

குளத்தூர், ஆக.13: குளத்தூர் அருகே கீழவைப்பார் தூயமோட்ச அலங்கார அன்னை ஆலயதிருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.குளத்தூர் அருகே கீழவைப்பார் மீனவ கிராமத்தில் உள்ள தூய மோட்ச அலங்கார அன்னை ஆலய திருவிழா வருடந்தோறும் ஆகஸ்ட் மாதம் 10நாட்கள் வெகுசிறப்பாக நடைபெறும். வழக்கம்போல் இந்த வருட திருவிழாவை முன்னிட்டு  தூய மோட்ச அலங்கார அன்னையின் ஆபரணம் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. தொடர்ந்து மறையுரை, நற்கருணை ஆசீர்வாதத்துடன்கொடியேற்றப்பட்டு திருவிழா துவங்கியது.

தொடர்ந்து திருவிழாவின் பத்து நாட்களும் சிறப்பு திருப்பலிகள், மறையுரை, திருயாத்திரை திருப்பலி, பெருயாத்திரை திருப்பலி மற்றும் நற்கருணை ஆசீர்வாதங்களை பங்குதந்தைகள் வழங்க உள்ளனர். தொடர்ந்து திருவிழா பத்தாவது நாள் வருகிற 15ம்தேதி அன்னையின் சொரூபத்துடன் தேர் பவனி நடைபெறும் என கீழவைப்பார் பங்குதந்தை அலாய்சியஸ் தெரிவித்தார்.

Tags :
× RELATED திருமலாபுரம் காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்