×

வட்டார கபடி போட்டி சாத்தான்குளம் மாணவிகள் சாதனை

சாத்தான்குளம், ஆக.13: சாத்தான்குளம், நாசரேத் கல்வி வட்டார அளவிலான மாணவிகளுக்கான கபடி போட்டி நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் பொறியியல் கல்லூரியில் நடந்தது. இதில் சூப்பர்சீனியர் பிரிவில் சாத்தான்குளம் புனித ஜோசப் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் முதல் பரிசும், ஜூனியர் பிரிவில் இரண்டாம் பரிசும் பெற்றனர்.

கபடி போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளை பள்ளித்தாளாளர் ரெமிஜியுஸ் லியோன், தலைமையாசிரியர் அருட்சகோதரி அமிர்தராஜரீகம், உடற்கல்வி ஆசிரியர் அன்பரசி, பயிற்சியாளர் மணி உள்ளிட்ட பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினர் பாராட்டினர்.


Tags :
× RELATED திருமலாபுரம் காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்