×

பனை மரத்தில் லோடு ஆட்டோ மோதி டிரைவர் பலி

சாத்தான்குளம்,  ஆக.13: சாத்தான்குளம் அருகே உள்ள அம்பலச்சேரியைச் சேர்ந்தவர் வேல் மகன் பேச்சிமுத்து (35). இவர் நாசரேத்தில் இருந்து கோழி தீவனத்தை ஏற்றி கொண்டு சாத்தான்குளம் வழியாக நாகர்கோவில் சென்றார். சாத்தான்குளம் அடுத்த அரசு போக்குவரத்து கழக பணிமனை செல்லும் வழியில் உள்ள தரைமட்ட பாலம் அருகே அதிகாலை 1மணி அளவில் வந்தபோது சுமை ஆட்டோ எதிர்பாராதவிதமாக சாலையோரத்தில் நின்ற பனை மரத்தில் பயங்கரமாக மோதியது. இதில் லோடு ஆட்டோவின் முன்பக்க சேதமாகி டிரைவர் பேச்சிமுத்து சம்பவ இடத்திலேயே இறந்தார்.   இதுகுறித்து சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் ராஜாசுந்தர் விசாரணை நடத்தி வருகிறார்.

எள்ளுவிளை அம்மன் கோயிலில் வருஷாபிஷேகம்
திருச்செந்தூர், ஆக.13: திருச்செந்தூர் அருகே எள்ளுவிளை வாடாப்பூ அம்மன் கோயில் வருஷாபிஷேகம் மற்றும் கொடை விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.குதிரைமொழி கிராமம் எள்ளுவிளையில் உள்ள வாடாப்பூ அம்மன் கோயிலில் வருஷாபிஷேகம் மற்றும் கொடை விழா நடந்தது. விழாவை முன்னிட்டு கோயில் அதிகாலை நடைதிறக்கப்பட்டு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து வருஷாபிஷேகத்திற்கான யாகபூஜைகள் தொடங்கியது. பின்னர் கோயில் விமான கலசத்தில் புனித நீரினால் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து அம்பாள் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு பூஜை நடந்தது. மாலையில் மேலக்கோயிலில் இருந்து சுவாமிகள் அழைப்பு நிகழ்ச்சி நடந்தது.

இரவில் பெண்கள் கைமணி அடித்து சிறப்பு பூஜை நடந்தது. நேற்று முன்தினம் மதியம் மஞ்சள் நீராட்டு விழாவும் மாலையில் படக்கஞ்சி பூஜையும் நடந்தது. இரவில் வாடாப்பூ அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அலங்கார பூஜை நடந்தது. கொடைவிழாவில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.

Tags :
× RELATED இளையரசனேந்தலில் சுமை தூக்கும் தொழிலாளர் சங்க பெயர் பலகை திறப்பு