×

சாதிவாரி கணக்கெடுப்பு பட்டியலில் பெயர் விடுபட்டவர்களில் தகுதியானவர்களுக்கு வீடு வழங்க நடவடிக்கை திட்ட இயக்குநர் தகவல்

கலசபாக்கம் ஆக.13: சமூக பொருளாதார சாதிவாரியான கணக்கெடுப்பு பட்டியலில், பெயர் விடுபட்டவர்களில் தகுதியான நபர்களுக்கு வீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என திட்ட இயக்குநர் க.லோகநாயகி தெரிவித்துள்ளார்.இதுகுறித்து திட்ட இயக்குநர் க.லோகநாயகி கூறியதாவது:பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தில் வீடு வழங்கக்கோரி, கிராம சபா கூட்டங்களில் மனு அளித்துள்ளவர்களின் பெயர் காத்திருப்போர் பட்டியலில் உள்ளது. இதில் தகுதியான நபர்களுக்கு கண்டிப்பாக வீடு வழங்கப்பட உள்ளது. `அவாஸ்ஆப்ஸ்' என்ற மொபைல் அப்ளிகேஷன் மத்திய ஊரக வளர்ச்சி அமைச்சகத்தின் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது. அதன் வழிமுறைகள் குறித்து மண்டல துணை பிடிஓக்களுக்கு திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று ஒருநாள் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

மண்டல துணை பிடிஓக்கள் ஊராட்சிகளுக்கு சென்று பயனாளிகள் குடிசை வீட்டில் வசிக்கிறார்களா, பொருளாதார ரீதியாக பின்தங்கி உள்ளார்களா, அவர்களது பெயர், ஆதார் எண், இனம், வயது, மொபைல் எண், தொழில் உள்ளிட்ட 15 வகையான தகவல்களை மொபைல் அப்ளிகேஷனில் தெரிவிக்க வேண்டும்.இந்த விவரத்தின் அடிப்படையில் பொதுமக்களுக்கு வீடுகள் வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும். இதற்கான பணிகள் நாளை (14ம் தேதி) முதல் அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் துவங்கப்பட உள்ளது. எனவே, சமூக பொருளாதார சாதி வாரியான கணக்கெடுப்பு பட்டியலில் பெயர் இல்லாதவர்களுக்கும் தகுதியான நபர்களாக இருப்பின் வீடு வழங்குவதற்கான உத்தரவுகள் வழங்கப்படும். வீடு கட்டாமல் பணம் பெற்றிருந்தால் அதுகுறித்து ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

Tags :
× RELATED திருவண்ணாமலை மாவட்டத்தில் 3...