×

கண்ணமங்கலம் அடுத்த காளசமுத்திரம் கிராமத்தில் தண்ணீர் இன்றி கருகிய நெல் பயிர்களுக்கு தீ வைப்பு விவசாயிகள் வேதனை

கண்ணமங்கலம், ஆக. 13: கண்ணமங்கலம் அடுத்த காளசமுத்திரம் கிராமத்தில் தண்ணீர் இன்றி கருகிய நெல் பயிர்களுக்கு விவசாயிகள் தீயிட்டு கொளுத்திய சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலம் அடுத்த காளசமுத்திரம் கிராமத்தில் விவசாயிகள் மழைநீரை நம்பி பெருமளவில் நெல் பயிரிட்டிருந்தனர். அதேபோல் ஏராளமான விவசாயிகள் பருவமழையை நம்பி துவரை, சோளம், வேர்க்கடலை உள்ளிட்டவைகளையும் பயிரிட்டுள்ளனர்.இந்நிலையில், வேலூர், திருவண்ணாமலை உள்பட வடமாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்தபடி பெய்யவில்லை. இதனால் கண்ணமங்கலம் அடுத்த காளசமுத்திரம் பகுதிகளில் நெல், வேர்க்கடலை, துவரை, சோளம் போன்ற பயிர்கள் தண்ணீர் இல்லாததால் காய்ந்து வருகிறது. அறுவடைக்கு தயாராகும் நிலையில் இருந்த நெல் பயிர்கள் கருகி வருகிறது.

இந்த பயிர்களை கால்நடைகளுக்கு கூட தீவனமாக பயன்படுத்த முடியாது என கூறப்படுகிறது. இதனால் விரக்தியடைந்த விவசாயிகள் தங்களது பயிர்களை தீயிட்டு கொளுத்தி வருகின்றனர். வியர்வை சிந்தி உழைத்தது வீணாகி ேபானதோடு, கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லையே என்ற வேதனை விவசாயிகளிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கருகிப்போன பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க அரசு தரப்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED அக்னி நட்சத்திரம் தொடங்கும் முன்பே...