×

தென்பெண்ணையாற்றில் தண்ணீர் திறப்பு சாத்தனூர் அணையில் நீர்மட்டம் 2 அடி குறைந்தது 92.10 அடி நீர் இருப்பு

தண்டராம்பட்டு, ஆக.13:திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்ட மக்களின் குடிநீர் தேவைக்காக, சாத்தனூர் அணையில் இருந்து தென்பெண்ணையாற்றில் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதால் அணையின் நீர்மட்டம் 2 அடி குறைந்தது.தண்டராம்பட்டு அடுத்த சாத்தனூர் அணை 119 அடி உயரம் கொண்டது. கடந்த ஆண்டு பெய்த பருவமழையில் அணை முழு கொள்ளளவை எட்டியதையடுத்து, அணையில் இருந்து வெளியேற்றப்படும் உபரிநீர் திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்ட மக்களின் குடிநீர் தேவை, பாசனத்திற்கு பெரிதும் பயன்பட்டு வந்தது.கடந்த மாதம் கிருஷ்ணகிரி கேஆர்பி அணையிலிருந்து உபரிநீர் திறந்து விடப்பட்டது.

இதனால் சாத்தனூர் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு அதிகரித்து 94 அடி நீர்மட்டமாக இருந்தது. இந்நிலையில், பொதுமக்களின் குடிநீர் தேவைக்காக கடந்த 6ம் தேதி முதல் சாத்தனூர் அணையில் இருந்து வினாடிக்கு 500 மில்லியன் கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டு வருகிறது.இதனால் அணையின் நீர்மட்டம் ெவகுவாக குறையத் தொடங்கி உள்ளது. அதன்படி, நேற்று மாலை நிலவரப்படி 2 அடி நீர்மட்டம் குறைந்து அணையின் நீர்மட்டம் 92.10 அடியாக உள்ளது.

Tags :
× RELATED வாக்குச்சாவடி மையங்களுக்குள்...