×

திமுக தலைவர் கருணாநிதி மறைவையொட்டி அனைத்து கட்சிகள் அமைதி ஊர்வலம்

தஞ்சை, ஆக. 9:  திமுக தலைவர் கருணாநிதி மறைவை முன்னிட்டு தஞ்சை மாவட்டம் முழுவதும் அனைத்து கட்சிகள் சார்பில் அமைதி ஊர்வலம் நடந்தது.
திமுக தலைவர் கருணாநிதி உடல்நல குறைவால் நேற்று முன்தினம் மாலை மரணமடைந்தார். இதையடுத்து தஞ்சையில் அனைத்து கட்சிகள் சார்பில் அமைதி ஊர்வலம் நடந்தது. திமுக முன்னாள் அமைச்சர் உபயதுல்லா, பாமக மாநில செயற்குழு உறுப்பினர் குஞ்சிதபாதம், காங்கிரஸ் ராஜேந்திரன், திக வக்கீல் அமர்சிங், விடுதலை சிறுத்தைகள் கட்சி சொக்காரவி, மமக பாதுஷா, மதிமுக நகர செயலாளர் தமிழ்செல்வன், சிபிஐ பாரதி, சிபிஎம் நீலமேகம், தமிழ தேசிய பேரியிக்கம் மணியரசன், மூத்த வக்கீல் ராமமூர்த்தி, ஏஐடியூசி மாநில செயலாளர் சந்திரகுமார், தஞ்சை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி துணைத்தலைவர் அன்பரசன் உட்பட அனைத்து கட்சியினர் பங்கேற்றனர். பின்னர் கருணாநிதி படத்துக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். இதேபோல் தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை சார்பில் மாநகர தலைவர் வாசுதேவன் தலைமையில் கருணாநிதி உருவப்படத்துக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.
கும்பகோணம்:  கும்பகோணம் மகாமக குளக்கரையில் இருந்து அனைத்து கட்சிகள் சார்பில் மவுன ஊர்வலம் நடந்தது. வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் லோகநாதன் தலைமை வகித்தார். அதிமுக தொகுதி செயலாளர் தேவரத்தினம், திமுக நகர அவைத்தலைவர் செல்வராஜ், நகராட்சி முன்னாள் தலைவர் மதுரம், தமாகா வடக்கு மாவட்ட தலைவர் ஜிர்ஜிஸ், மதிமுக விவசாய பிரிவு மாநில செயலாளர் முருகன், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் பாரதி, மார்க்சிஸ்ட் மாவட்டக்குழு உறுப்பினர் பாண்டியன், பாமக மாநில துணைத்தலைவர் வெங்கட்ராமன், விடுதலை சிறுத்தைகள் மாவட்ட செயலாளர் தமிழருவி, திக நகர செயலாளர் ரமேஷ் மற்றும் பலர் பங்கேற்றனர். பின்னர் நடந்த இரங்கல் கூட்டத்தில் முன்னாள் எம்பி கிருஷ்ணமூர்த்தி, காங்கிரஸ் மாவட்ட பொது செயலாளர் அய்யப்பன், தமாகா மாநில செயலாளர் அசோக்குமார், இணை செயலாளர் சாதிக் அலி, நகர இளைஞரணி தலைவர் ஸ்ரீராம் பங்கேற்றனர். திருவையாறு: திருவையாறில் அனைத்து கட்சிகள் சார்பில் மவுன ஊர்வலம் நடந்தது.  திமுக ஒன்றிய அவைத்தலைவர் கோவிந்தராஜ் தலைமை வகித்தார். திமுக வர்த்தக அணி  செயலாளர் மதியழகன், தலைமை கழக பேச்சாளர் ஆண்டவர் செல்வம் மற்றும் பல்வேறு கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.
அதிராம்பட்டினத்தில் அனைத்து கட்சிகள் சார்பில் மவுன ஊர்வலம் நடந்தது. திமுக நகர தலைவர் ராம குணசேகரன் தலைமை வகித்தார். ஊர்வலம் முடிவில் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

பேராவூரணி:  பேராவூரணியில் வர்த்தகர் கழகம் சார்பில் அமைதி ஊர்வலம் நடந்தது. திமுக நிர்வாகி வேலுச்சாமி தலைமை வகித்தார். அதிமுக எம்எல்ஏ கோவிந்தராசு, காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ சிங்காரம், சிபிஐ பாலசுந்தரம், சமக மாவட்ட தலைவர் ராஜா, தேமுதிக சீனிவாசன், திக சிதம்பரம், வர்த்தக சங்கம் நல்லசாமி, விடுதலை சிறுத்தைகள் அரவிந்தகுமார், திமுக அவைத்தலைவர் நீலகண்டன் பங்கேற்றனர்.

பட்டுக்கோட்டை:  பட்டுக்கோட்டையில்  அனைத்து கட்சியினரின் மவுன ஊர்வலம் நடந்தது. திமுக முன்னாள் மாவட்ட  அவைத்தலைவர் அப்துல்சமது, நகர பொறுப்பாளர் செந்தில்குமார், நகர அதிமுக  செயலாளர் சுபராஜேந்திரன், நகர காங்கிரஸ் கிருஷ்ணமூர்த்தி, தமாகா நகர தலைவர்  குமார், முன்னாள் நகராட்சி தலைவர் ஜெயபாரதி விசுவநாதன், சிபிஐ மாநிலக்குழு  உறுப்பினர் பக்கிரிசாமி, ஒன்றிய செயலாளர் மார்க்ஸ், சிபிஎம் ஒன்றிய  செயலாளர் கந்தசாமி, விடுதலை சிறுத்தைகள் கட்சி சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்  சக்கரவர்த்தி, தேமுதிக மாவட்ட நிர்வாகி ராஜரெத்தினம் மற்றும் பலர்  பங்கேற்றனர். திருவிடைமருதூர்: திருநாகேஸ்வரம்  பேரூர் சார்பில் மவுன ஊர்வலம் நடந்தது. திமுக நகர செயலாளர் தாமரைச்செல்வன்,  அதிமுக நகர செயலாளர்  வைரவேல், பாமக மாவட்ட துணைத்தலைவர் சண்முகம், பாஜ  மாவட்ட தலைவர் ராஜா, திக நிர்வாகி நிம்மதி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.  திருவிடைமருதூரில் நடந்த அமைதி ஊர்வலத்தில் திமுக ஒன்றிய துணை செயலாளர்  ரகுபதி,பொருளாளர் பவுன் மனோகரன், தமாகா ஒன்றிய மாவட்ட தலைவர் ராஜாங்கம்,  பாஜ பொருப்பாளர் சாமிநாதன், விடுதலை சிறுத்தைகள் நகர செயலாளர் வாசு உள்ளிட்ட பலர் பங்கேற்றனர.  இதேபோல் கிருஷ்ணாபுரத்தில் மவுன ஊர்வலம் நடந்தது.\

Tags :
× RELATED ஒரத்தநாடு அருகே பின்னையூர் மக்கள் தேர்தல் புறக்கணிப்பு