×

பாபநாசம் அருகே தீவிபத்து - 12 கூரை வீடுகள் சாம்பல்

பாபநாசம், ஆக. 9:  தஞ்சை மாவட்டம் பாபநாசம் அடுத்த வங்காரம்பேட்டையில் முஸ்லிம் தெரு உள்ளது. இந்த தெருவில் அதிகளவில் கூரை வீடுகள் உள்ளது.
இந்நிலையில் லத்தீப் என்பரது கூரை வீட்டில் நேற்று காலை 11.30 மணியளவில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதையடுத்து அலறியடித்து கொண்டு லத்தீப் மற்றும் குடும்பத்தினர் வெளியே ஓடி வந்தனர். அப்போது காற்று வேகமாக வீசியதால் அருகே உள்ள கூரை வீடுகளுக்கும் தீ பரவியது. இதில் காதர் மைதீன், பாத்திமா பீவி, சம்சாத்  பேகம், ஜாகிர் உஷேன், ஷேக் நூர்தீன், நாசர் அலி, மதினா பேகம், அஸ்ரப் அலி,  ஷேக் உசேன், லெனின், சலீம் ஆகியோரது கூரை வீடுகளும் தீப்பற்றி எரிந்தது. இதையடுத்து பாபநாசம் பகுதி தீயணைப்பு நிலையத்துக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். மேலும்  தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க பொதுமக்கள் போராடினர். அந்த நேரத்தில் 4 வீடுகளில் இருந்த சிலிண்டர்கள் வெடித்து சிதறியது. இதனால் அலறியடித்து கொண்டு பொதுமக்கள் ஓடினர். பாபநாசம், கும்பகோணம், தஞ்சையில் இருந்து 3 தீயணைப்பு வாகனங்களில் வீரர்கள் வந்து தீயை போராடி அணைத்தனர். இந்த தீவிபத்தில் வீட்டில் இருந்த அத்யாவசிய பொருட்கள் எரிந்து சாம்பலானது. தீவிபத்தில் ரூ.15 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமானது.
இந்த தகவல் கிடைத்ததும் கலெக்டர் அண்ணாதுரை, கும்பகோணம் சார் ஆட்சியர் பிரதீப்குமார், டிஆர்ஓ சக்திவேல் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டு தீவிபத்தில் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு ஆறுதல் கூறினர். பாபநாசம் போலீசார் வழக்குப்பதிந்து தீவிபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.


Tags :
× RELATED தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதியில்...