×

ஆன்லைனில் ஏமாந்த பொறியாளர் எஸ்பி அலுவலகத்தில் புகார் தாய்லாந்துக்கு சுற்றுலா அழைத்து செல்வதாக ₹50,000 மோசடி

வேலூர், ஆக.9: தாய்லாந்து சுற்றுலா அழைத்து செல்வதாக ₹50,000 மோசடி செய்யப்பட்டது குறித்து வேலூர் பொறியாளர் எஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்தார். வேலூர் அடுத்த சத்துவாச்சாரியைச் சேர்ந்தவர் நரேஷ்குமார்(40), பொறியாளர். வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார். இவர் வேலூர் எஸ்பி அலுவலகத்தில் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: நான் வெளிநாட்டில் பொறியாளராக பணிபுரிந்து வருகிறேன். கடந்த சில மாதங்களுக்கு முன்பு குடும்பத்துடன் சுற்றுலா செல்ல முடிவு செய்தேன். இதனால் வெளிநாடுகளுக்கு சுற்றுலா அழைத்துச்செல்லும் ஏஜென்டுகளை ஆன்லைன் விளம்பரம் மூலம் பார்த்தேன்.இதில் ஒரு ஏஜென்டிடம் தாய்லாந்திற்கு சுற்றுலா செல்ல குடும்பத்தினர் அனைவருக்கும் டிக்கெட் புக் செய்தேன். இதற்காக ஒரு குறிப்பிட்ட ஆப் பயன்படுத்தினேன். அந்த ஆப் மூலம் ₹50,000 பணத்தை செலுத்தினேன். உடனே விமான டிக்கெட், தாய்லாந்தில் ஓட்டல் டிக்கெட் உள்ளிட்டவற்றை இ-மெயில் மூலம் அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து அவர்கள் அனுப்பிய விமான டிக்கெட் விவரங்களை கூறி, சம்மந்தப்பட்ட விமான நிறுவனத்திடம் கேட்டபோது, டிக்கெட் கேன்சல் செய்யப்பட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து நான் ஏமாற்றப்பட்டது தெரியவந்தது. எனவே இதுதொடர்பான நடவடிக்கை எடுத்து ₹50,000 பணத்தை திரும்ப பெற்றுத்தர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags :
× RELATED சிறுமிக்கு நடக்கவிருந்த திருமணம்...