×

மாவட்ட தொழில் மையம் சார்பில் தொழில் தொடங்க ₹5 கோடி வரை மானிய கடன்

வேலூர், ஆக.9: புதிதாக தொழில் தொடங்கும் பட்டதாரிகளுக்கு நீட்ஸ் திட்டத்தின் மூலம் ₹25 லட்சம் வரை மானியம் வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் சுயதொழில் தொடங்க புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் (நீட்ஸ்) மூலம் கடன் வழங்கப்பட உள்ளது. மாவட்ட தொழில் மையம் சார்பில் இத்திட்டம் செயல்படுத்த்தப்பட்டு வருகிறது. இதன்மூலம் ₹5 கோடி வரை கடன் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதில் கடன் பெற விரும்புவோர் ஏதேனும் ஒரு பாடப்பிரில் பட்டப்படிப்பு அல்லது டிப்ளமோ, ஐடிஐ ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் 21 வயதை கடந்தும் 45 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். அதேபோல் புதிதாக தொடங்கப்படவுள்ள தொழிலின் திட்ட மதிப்பு ₹10 லட்சத்தில் இருந்து ₹5 கோடிக்குள் இருக்க வேண்டும்.இவர்களுக்கு அதிகபட்ச மானியத் தொகையாக 25 சதவீதம் அதாவது ₹25 லட்சம் வரை வழங்கப்படும். தேர்ந்தெடுக்கப்படும் பட்டதாரிகளுக்கு சென்னை தொழில் முனைவோர் பயிற்சி நிறுவனம் மூலம் 15 நாட்கள் திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படவுள்ளது. இதுகுறித்த தவல்களை வேலூர் காங்கேயநல்லூர் சாலையில் உள்ள மாவட்ட தொழில் மையத்தில் பெறலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags :
× RELATED மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம்...