×

கருணாநிதி மறைவையொட்டி கன்னியாகுமரி வெறிச்சோடியது : படகு சேவை நிறுத்தம், கடைகள் அடைப்பு

கன்னியாகுமரி, ஆக. 9:  திமுக தலைவர் கருணாநிதி மறைவையொட்டி நேற்று சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரி வெறிச்சோடியது. முக்கிய வீதிகளில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. கடல் நடுவே உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம், திருவள்ளுவர் சிலைக்கு நேற்று படகுசேவை ரத்து செய்யப்பட்டது. காந்தி, காமராஜர் மண்டபங்களில் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படவில்லை. அவை பூட்டிய நிலையில் இருந்தன. பழத்தோட்டம் சுற்றுச்சூழல் பூங்காவும் மூடப்பட்டிருந்தது. இதனால் கன்னியாகுமரிக்கு வந்திருந்த சுற்றுலா பயணிகள் தங்கும் விடுதிகளில் முடங்கினர். சின்னமுட்டத்தில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. சுமார் 300க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. கன்னியாகுமரி விவேகானந்தபுரம், கொட்டாரம், பஞ்சலிங்கபுரம், மகாதானபுரம், லீபுரம், கோவளம் உள்ளிட்ட பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. திமுக தலைவர் கருணாநிதி நல்லடக்கம் முடிந்த பின்னர் மாலை கடைகள் திறக்கப்பட்டன.



Tags :
× RELATED ‘வைப்புநிதி உங்கள் அருகில்’ விழிப்புணர்வு நிகழ்ச்சி