×

பட்டுக்கோட்டை நகர் பகுதியில் கற்கள் கொட்டி பல மாதமாகியும் தார்ச்சாலை அமைக்கவில்லை

பட்டுக்கோட்டை, ஆக. 7:  பட்டுக்கோட்டை நகர் பகுதியி–்ல் கப்பிக்கல் கொட்டி பல மாதமாகியும் தார்ச்சாலை அமைக்கப்படாமல் உள்ளது. பணிகளை விரைந்து முடிக்காவிட்டால் போராட்டம் நடத்த மக்கள் முடிவு செய்துள்ளனர். பட்டுக்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு வார்டுகளில் பழைய தார் சாலைகளை புதிய தார்ச்சாலைகளாக மாற்றும் பணி  நடந்து வருகிறது. இந்த பணி 9 மாதங்களுக்கு மேலாக நடந்து வருகிறது. சம்மந்தப்பட்ட வார்டுகளில் புதிய தார் சாலைகளாக மாற்றுவதற்கு கப்பிக்கல் கொட்டப்பட்டு பல மாதங்களாகியும் சாலைகள் அமைக்கவில்லை. சாலைகளில் கப்பிக்கல் பல மாதங்களாக கொட்டப்பட்டுள்ளதால் இருசக்கர வாகனங்களில் செல்லும் பலர் நிலை தடுமாறி விழுந்து  காயமடைகின்றனர். இதுகுறித்து பல்வேறு அரசியல் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தியும் நகராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளமால் உள்ளது. எனவே போர்க்கால அடிப்படையில் தார்ச்சாலை அமைக்கும் பணிகளை முடிக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து சமூக ஆர்வலர் சுண்ணாம்புக்கார தெருவை சேர்ந்த தென்னரசு கூறுகையில், எங்கள் வார்டில் புதிய தார்சாலை அமைப்பதற்கு கப்பிக்கல் கொட்டப்பட்டு 8 மாதங்களுக்கு மேலாகிவிட்டது. இதனால் தினசரி இந்த சாலை வழியாக சைக்கிளில் செல்லும் பள்ளி மாணவர்கள் விழுந்து காயமடைகின்றனர். இருசக்கர வாகனங்களில் செல்வோரும் கீழே விழுந்து காயமடைகின்றனர். மேலும் இரு மற்றும் நான்கு சக்கர வாகனங்களும் அடிக்கடி பழுதாகி விடுகிறது. குறைந்தது நாள் ஒன்றுக்கு 5 பேராவது கீழே விழுந்து காயமடைகின்றனர். எனவே நகராட்சி அதிகாரிகள் அலட்சியப்போக்குடன் செயல்படாமல் போர்க்கால அடிப்படையில் தார்ச்சாலை அமைக்கும் பணிகளை முடிக்க வேண்டும். இல்லையென்றால் பொதுமக்களை ஒன்று திரட்டி மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என்றார். போராட்டம் நடத்த மக்கள் முடிவு

Tags :
× RELATED திருவாரூர் – காரைக்குடி பயணிகள் ரயில்...