×

தமிழகத்தில் முதன் முறையாக நீலகிரியில் சேற்றில் விளையாடும் கால்பந்து போட்டி

ஊட்டி,  ஆக. 7: தமிழக - கேரள எல்லையில் உள்ள தாளூர் பகுதியில் இரு மாநில மாணவர்கள்  நட்புறவிற்காக தனியார் கல்லூரி சார்பில் நடந்த சேற்றில் விளையாடும் ‘மட்  புட்பால்’ போட்டிகள் மாணவர்களையும், பொதுமக்களையும் கவர்ந்தது.நீலகிரி  மாவட்டம் தமிழக - ேகரள எல்லையாக உள்ளது. இதனால், இரு மாநில எல்லைகளிலும்  இரு மொழி பேசும் மக்கள் வசிக்கின்றனர். தமிழகத்தில் உள்ள பலர் படிப்பு,  கூலி வேலை உட்பட பல்வேறு தொழில்களுக்காக கேரள மாநிலம் செல்கின்றனர்.  அதேபோல், ேகரளாவை சேர்ந்த பலர் தமிழக எல்லைக்குள் வந்து இங்கு பள்ளி,  கல்லூரிகளில் பயில்கின்றனர்.
அதேபோல், பல்வேறு தொழில்களுக்காகவும் நாள்  தோறும் வந்துச் செல்கின்றனர். எல்லைகளில் உள்ள இரு மாநில மக்களும்  எப்போதும் நட்புறவோடு இருந்தாலும், சில சமயங்களில் தேவையற்ற சில பிரச்னை  கிளம்புவது வழக்கம். இது போன்று பிரச்னை வராமல் இருக்கவும், மாணவர்கள்  மத்தியில் நட்புறவோடு இருப்பதற்காகவும், அதே சமயம் மழைக் காலம் என்பதால்  மாணவர்கள் உடற்பயிற்சி இன்றி இருக்க கூடாது என்ற நோக்கத்தில் தமிழக - கேரள  எல்லையில் தமிழக பகுதிக்குள் உள்ள தாளூர் நீலகிரி கல்லூரியில் ‘மட் புட்பால்’ என்ற சேற்றில்  விளையாடும் கால்பந்து போட்டி நடித்தப்பட்டது.
இதில், நீலகிரி  மாவட்டத்தில் உள்ள சில கல்லூரி மாணவர்கள், கேரள மாநிலத்தில் உள்ள சில  கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள் கலந்துக் கொண்டு விளையாடினர்.




Tags :
× RELATED அமைச்சர் முன்னிலையில் பாஜவினர் 100 பேர்...