×

ஈரோட்டில் இலவச வேட்டி சேலை உற்பத்தி துவங்கியது

ஈரோடு, ஆக. 7: ஈரோடு மாவட்டத்தில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி செய்யும் பணி துவங்கியுள்ளது. நடப்பாண்டில் மொத்த உற்பத்தியில் ஈரோடு மாவட்டத்திற்கு 50 சதவீதம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.பொங்கல் பண்டிகையையொட்டி ஏழை மக்களுக்கு இலவச வேட்டி, சேலைகள் வழங்கும் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.  ஈரோடு, திருச்செங்கோடு, திருப்பூர், கோவை, விருதுநகர், நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் இலவச வேட்டி சேலை உற்பத்தி செய்யப்படுகிறது.   நடப்பாண்டில் மாநிலம் முழுவதும் 3 கோடி வேட்டி சேலைகள் உற்பத்தி செய்ய ஆர்டர் வழங்கப்பட்டுள்ளது.  இந்நிலையில் நடப்பாண்டிற்கான இலவச வேட்டி உற்பத்தி ஈரோடு மாவட்டத்தில் தற்போது துவங்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் மொத்த உற்பத்தியில் ஈரோடு மாவட்டத்திற்கு மட்டும் இந்தாண்டு 50 சதவீதம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.     மாவட்டத்தில் உள்ள 46 விசைத்தறி கூட்டுறவு சங்கங்களின் கட்டுப்பாட்டில் உள்ள 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைத்தறிகள் மூலம் 57 லட்சத்து 23 ஆயிரம் வேட்டியும், 57 லட்சத்து 33 ஆயிரம் சேலைகளும் உற்பத்தி செய்யவும், உற்பத்தி பணியினை டிசம்பர் மாத இறுதிக்குள் முடிக்கவும் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

Tags :
× RELATED 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு