×

அந்தியூர் விற்பனைக் கூடத்தில் ரூ.1.84 கோடிக்கு விளைபொருட்கள் ஏலம்

அந்தியூர், ஆக. 7:  ஈரோடு மாவட்டம் அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நேற்று நடைபெற்ற விவசாய விளைபொருட்களின் ஏலம் நடந்தது. இதில் அந்தியூர் அதன் சுற்றுவட்டாரப்பகுதி விவசாயிகள் ஏலத்திற்கு பருத்திகளை கொண்டு வந்திருந்தனர். பி.டி., ரக பருத்தி ஒரு கிலோ குறைந்தபட்சமாக ரூ.59.14 முதல் அதிகபட்சமாக ரூ.64.77 வரை ஏலம் போனது. இதில் 8 ஆயிரம் பருத்தி மூட்டைகள், மொத்தம் ரூ.1 கோடியே 75 லட்சத்துக்கு ஏலம் போனது. இந்த வாரம் பருத்தி வரத்து குறைந்ததால், கடந்த வாரத்தை விட கிலோவிற்கு ரூ.2.50 அதிகமாக விற்றது. இதேபோல் 35 ஆயிரம் தேங்காய்கள் வரத்து இருந்தது. இதில் சிறிய தேங்காய் ஒன்று ரூ.5.20 முதல் பெரிய தேங்காய் ரூ.16.50 என மொத்தம் ரூ.4 லட்சத்துக்கும், கொப்பரை 100 மூட்டைகள் வந்ததில் கிலோ ரூ.74.89 முதல் அதிகபட்சமாக ரூ.100.50 வரை என மொத்தம் ரூ.4.25 லட்சத்துக்கு ஏலம் போனது. எள் 11 மூட்டைகள் வரத்து இருந்தது. இதில் ஒரு கிலோ ரூ.76.29 முதல் ரூ.101.29 வரை என மொத்தம் ரூ.80 ஆயிரத்திற்கும், மக்காச்சோளம் 20 மூட்டைகள் வரத்து இருந்தது. இதில் குவிண்டால் ரூ.1389 முதல் ரூ.1409 வரை என மொத்தம் ரூ.25 ஆயிரத்திற்கு ஏலம் போனது. நேற்று நடந்த ஏலத்தில் விளைப்பொருட்கள் ரூ.1 கோடியே 84 லட்சத்து 30 ஆயிரத்துக்கு ஏலம் நடந்தது. இந்த விளைபொருட்களை வாங்குவதற்காக பெள்ளாச்சி, அன்னூர், மகுடஞ்சாவடி, திருப்பூர், கோவை, பெருந்துறை, விருதுநகர், தேனி, ஆத்தூர் போன்ற பகுதிகளில் இருந்து வியாபாரிகள் வந்திருந்தனர்.

Tags :
× RELATED தமிழக கர்நாடக எல்லையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை