×

விபத்து ஏற்படும் அபாயம் கற்கள் பெயர்ந்து குண்டும் குழியுமாக மிரட்டுது ஏ.புதுப்பட்டி கிராம விவசாயிகள் மனு குடிநீர் விநியோகத்தில் பாகுபாடு

விருதுநகர், ஆக. 7: குடிநீர் விநியோகத்தில் பாகுபாடு காட்டுவதாகவும், வாறுகால், தெருவிளக்கு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் குல்லூர்சந்தை கிராம வடக்குத்தெருவை சேர்ந்த பெண்கள் காலிக்குடங்களுடன் நேற்று மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: குல்லூர்சந்தை கிராமத்தில் 700க்கும் அதிகமான குடியிருப்புகள் உள்ளன. இதில் வடக்குத்தெருவில் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த குடியிருப்புகளுக்கு மட்டும் மாதம் இருமுறை குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. மற்ற பகுதிகளுக்கு மூன்று நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வழங்கப்படுகிறது. வடக்கு தெருவுக்கு தண்ணீர் திறந்துவிடும் நபர் பாகுபாடுடன் 15 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் திறந்து விடுகிறார். 15 நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் விடுவதால், வரும் தண்ணீரை தொட்டிகளில் சேமித்து வைத்து பயன்படுத்த வேண்டியுள்ளது. இதனால், சேமித்து வைக்கும் தண்ணீரில் 3 நாட்களில் புழுக்கள் உருவாகின்றன. சுகாதாரப் பணியாளர்கள் தொட்டிகளில் மருந்து ஊற்றி விடுகின்றனர். இதனால் பயன்படுத்த முடியாத நிலைவில்லை. வடக்கு தெருவில் உள்ள பாழடைந்த கிணற்றை மூட வேண்டும். தெருவிளக்குகள் எரியாத காரணத்தால், இரவு நேரங்களில் பெண்கள் தெருவில் நடமாட முடியவில்லை. இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனர்.




Tags :
× RELATED செங்கமலநாச்சியார்புரம் ஊராட்சிக்கு...