×

கூட்டுறவு கடன் சங்க நிர்வாகிகள் பதவியேற்பு

உடன்குடி, ஆக. 7: பரமன்குறிச்சி கூட்டுறவு கடன் சங்கத் தேர்தலில் போட்டியின்றித் தேர்வான திமுக நிர்வாகிகள் பதவியேற்றனர். உடன்குடி ஒன்றியத்துக்கு உட்பட்ட பரமன்குறிச்சி கூட்டுறவு கடன் சங்க நிர்வாகிகள்   தேர்தலில் திமுகவினர் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டனர். தலைவராக   உடன்குடி ஒன்றிய திமுக செயலாளர் பாலசிங், துணைத்தலைவராக திமுக   வர்த்தக அணியைச் சேர்ந்த பூங்குமார்  போட்டியின்றித் தேர்வு   செய்யப்பட்டனர். நிர்வாகிகளாக தேவமாதா, சுலோச்சனா, ஆனந்தபாய், ராஜேந்திரகுமார், கண்ணன், மந்திரமூர்த்தி, கண்ணன், ராஜகோபால், மாயாண்டி    தேர்வு செய்யப்பட்டனர். முன்னதாக தலைவர், துணைத்தலைவர்    வங்கியின் செயலாளர், தேர்தல் நடத்தும் அலுவலர்  முன்னிலையில் பதவியேற்றனர். விழாவில் திமுக மகளிர் அணி மாவட்ட அமைப்பாளர் ஜெசி பொன்ராணி, மாவட்ட துணை அமைப்பாளர்கள் வர்த்தக அணி ரவிராஜா, சிறுபான்மை அணி சேக் முகமது,   மருத்துவ அணி பாலசிங் பாண்டியன், நெசவாளர் அணி மகாவிஷ்ணு, பரமன்குறிச்சி   ஊராட்சி செயலாளர் இளங்கோ, மெஞ்ஞானபுரம் ஊராட்சி பொறுப்பாளர் ஜெரால்டு, மாவட்டப்   பிரதிநிதி மதன்ராஜ், சிவராமலிங்கம், அரிகிருஷ்ணன், பிரபாகரன், ஒன்றிய பொருளாளர் வாசகன், வர்த்தக அணி ஒன்றிய அமைப்பாளர் ராஜேந்திரன், இளைஞர் அணி நகர அமைப்பாளர் அஜய், மாணவர் அணி பாய்ஸ், கிதியோன், நகர பொருளாளர் தங்கம்,   திரவியம், மோகன் மற்றும் பலர் பங்கேற்றனர்.

 இதே போல் உடன்குடியில் தேர்தல் அலுவலர் செல்வராஜ் நடத்திய கூட்டுறவு வீட்டுவசதி சங்க புதிய நிர்வாகிகளுக்கான தேர்தலில் தலைவராக வெங்கட்ராமானுஜபுரம் அதிமுக ஊராட்சி செயலாளர்   ராஜ்குமார் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டார். துணைத்தலைவர் தேர்தலில்  குலசேகரன்பட்டினம் ஊராட்சி செயலாளர் சங்கரலிங்கம் வெற்றிபெற்றார். நிர்வாகிகளாக   தேவராஜ், முருகன், ரகு, திலகவதி, சோமசுந்தரம், பட்டுகனி, சுரேஷ்ராம்,   ராமகனி, மாடசாமி  தேர்வு செய்யப்பட்டனர்.
 பதவியேற்பு விழாவில் எம்ஜிஆர் மன்ற மாவட்ட துணைச்செயலாளர் மூர்த்தி, மாநில பேச்சாளர் பொன்ராம்,  அண்ணா   தொழிற்சங்க நிர்வாகி வெள்ளத்துரை,  இளைஞர், இளம்பெண்கள் பாசறை   ஒன்றியச் செயலாளர் சொர்ணசேகர், எம்ஜிஆர் இளைஞர் அணி நகரச் செயலாளர் அஸ்சாப் உள்ளிட்ட  பலர்   பங்கேற்றனர். ஏற்பாடுகளை  உடன்குடி கூட்டுறவு சங்கச் செயலாளர் முருகன் செய்திருந்தார்.

Tags :
× RELATED உளவியல் ஆலோசனை கூட்டம்