×

கோவில்பட்டி எவரெஸ்ட் பள்ளியில் அரியவகை நாணய கண்காட்சி

கோவில்பட்டி, ஆக.7: கோவில்பட்டி எவரெஸ்ட் மாரியப்பநாடார் மேல்நிலைப்பள்ளியில் 33வது நாணய கண்காட்சி நடந்தது. பள்ளி தலைவர் எவரெஸ்ட் ராமச்சந்திரன் தலைமை வகித்தார். நிர்வாக குழு உறுப்பினர் அய்யனார், ஆக்ரா தொழிலதிபர் பிரிட்ஜ்மோகன் அகர்வால்ஜி, ராணி அகர்வால்ஜி முன்னிலை வகித்தனர். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் திருவளர்செல்வி நாணய கண்காட்சியை திறந்து வைத்தார். பள்ளி நிர்வாக அதிகாரி சுசிலாதேவி வரவேற்றார். மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் பென்சர், தலைமையாசிரியர் சாந்தினி குத்துவிளக்கேற்றினர். கண்காட்சியில் மாணவ, மாணவியரின் அரியவகை நாணயங்கள் படைப்புகளான வ.உ.சி.சுதேசி கப்பல் உருவம் பொறித்த நாணயங்கள், டாடா நிறுவன தலைவர் ஜாம்ஜெட்சி, காமராஜர், நேரு, தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் ஆலய ஆயிரம் ரூபாய், ரவீந்திரநாத் தாகூர், சரித்திரகால நாணயங்கள், ரிசர்வ் வங்கியால் வெளியிடப்பட்ட நாணயங்கள், உள் மற்றும் வெளிநாட்டு வகை ஸ்டாம்புகள், புழக்கத்தில் இல்லாத இந்திய ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்கள் இடம் பெற்றிருந்தன. மேலும் பித்தளையால் வடிவமைக்கப்பட்ட ஆளாக்கு, நாளி, கும்பா, கெண்டி, அம்மி, திருகல், குத்துஉரல், ஆட்டுக்கல் போன்ற புழக்கத்தில் இல்லாத பொருள்களும் இடம் பெற்றிருந்தன. கண்காட்சியை திரளானோர் பார்வையிட்டனர். ஏற்பாடுகளை தலைமையாசிரியர் சாந்தினி, வரலாறு ஆசிரியை சித்ரா செய்திருந்தனர்.

Tags :
× RELATED தேரியூர் கோயிலில் பூக்குழி திருவிழா