×

அரியலூரில் தூய்மை கணக்கெடுப்பு ஊர்தி கலெக்டர் கொடியசைத்து துவக்கி வைத்தார்

அரியலூர், ஆக.3: அரியலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் சார்பில் தூய்மை கணக்கெடுப்பு ரதத்தை கலெக்டர்  விஜயலட்சுமி   கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்நிகழ்வின்போது கலெக்டர் தெரிவித்ததாவது: மத்திய அரசின் குடிநீர் மற்றும் சுகாதார அமைச்சகம், கிராமங்களில் தற்போதுள்ள சுகாதாரத்தின் தரம் மற்றும் சுகாதார கட்டமைப்பில் அடைந்த முன்னேற்றத்தின் அடிப்படையில், இந்தியாவிலுள்ள மாநிலங்கள் மற்றும் மாவட்டங்கள் தரவரிசை படுத்துவதற்காக, ஆக.1 முதல் 31ம் தேதி வரை தூய்மை கணக்கெடுப்பு (ஊரகம்) நடத்தப்படவுள்ளது.

இந்த தூய்மை கணக்கெடுப்பானது, தூய்மை பாரத இயக்கத்தின் விரிவான அளவீடுகள் அடிப்படையில் பொது இடங்களில் தூய்மை குறித்த கணக்கெடுப்பு, பொதுமக்களின் கருத்து அறிதல் மற்றும் தூய்மை பாரத திட்ட செயலாக்கம் போன்றவற்றின் பரிந்துரைகளின் அடிப்படையில் விரிவான மதிப்பீடு செய்யப்படும். அரியலூர் மாவட்டத்தில் உள்ள 201 கிராம ஊராட்சிகளில் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு தூய்மை ரதத்தை கொடியசைத்து துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு பொதுமக்கள் தக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு  கலெக்டர் விஜயலட்சுமி தெரிவித்தார். ஆடிப்பெருக்கையொட்டி காவிரி தாய்க்கு நம்பெருமாள் இன்று சீர்வரிசை அளிக்கிறார்

Tags :
× RELATED புதா.பழூர் அருகே அரசு அனுமதியின்றி மதுவிற்ற 2 பேர் கைது