×

அரியலூரில் குறுவட்ட தடகள போட்டிகள்

அரியலூர், ஆக. 3:  அரியலூர் மாவட்ட விளையாட்டரங்கில் பள்ளி கல்வித்துறை சார்பில் குறுவட்ட அளவிலான தடகள போட்டிகள் நேற்று நடந்தது.
போட்டிகளை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் புகழேந்தி துவக்கி வைத்தார். அரியலூர் பகுதியை சார்ந்த பள்ளிகளில்  இருந்து 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இதில் தடை தாண்டுதல், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், வட்டு எறிதல். குண்டு எறிதல். ஓட்டப்பந்தயம் 100, 200 மீட்டர் மற்றும் 400, 600, 800, 1500 மீட்டர் ஓட்டப்பந்தய போட்டிகள் நடந்தது. 14, 17, 19 வயதுக்கு உட்பட்ட மாணவ, மாணவிகளுக்கு தனித்தனியாக போட்டிகள் நடத்தப்பட்டன. ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டது.
மேலும் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவிகள் மாவட்ட அளவில் நடக்கும் போட்டிகளில் பங்கேற்க தகுதி பெற்றனர். உயரம் தாண்டும் போட்டியின்போது ஒரு மாணவியும், மாணவரும் தரையில் விழுந்து காயமடைந்தனர். அவர்களுக்கு முதலுதவி செய்யகூட மருந்து வைத்திருக்கவில்லை.

Tags :
× RELATED தத்தனூர் கீழவெளியில் பெயர் இல்லை...