×

ஆண்டிமடத்தில் 25ம் தேதி காஸ் நுகர்வோர் கூட்டம்

அரியலூர், ஜூலை 23:  அரியலூர் மாவட்ட உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில் ஆண்டிமடம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வருகிற 25ம் தேதி பிற்பகல் 3 மணிக்கு காஸ் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது. கூட்டத்தில் அனைத்து எண்ணெய் நிறுவனங்களின் பிரதிநிதிகள், காஸ் முகவர்கள் கலந்து கொள்ள உள்ளனர். காஸ் நுகர்வோர்கள், சமையல் காஸ் தொடர்பான குறைகள் இருப்பின் குறைதீர் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களது புகார்களையும், ஆலோசனைகளையும் தெரிவித்து பயனடையலாம் என கலெக்டர் .விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.

Tags :
× RELATED புதா.பழூர் அருகே அரசு அனுமதியின்றி மதுவிற்ற 2 பேர் கைது