×

வாசகர் பகுதி

நன்றி குங்குமம் தோழி

பற்பசையின் பயன்கள்


தினமும் காலை எழுந்தவுடன் நாம் செய்யும் முதல் வேலை, பற்பசைக் கொண்டு நம்முடைய பற்களை சுத்தம் செய்வது தான். நம் வாயில் இருக்கும் கிருமிகளை அழிக்கும் தன்மைக் கொண்ட இந்த பற்பசையில் பல எண்ணில் அடங்கா பலன்கள் உள்ளன.

* காலில் ஒட்டிக் கொண்ட தாரை பற்பசையைத் தடவி கழுவினால் போய் விடும்.

* கண்ணாடிப் பொருட்களில் உள்ள தூசியை அகற்ற சிறிது பேஸ்டைத் தடவி அழுத்தி துடைக்க வேண்டும்.

* சிடி, டிவி யில் கீறல் உள்ள இடங்களில் சிறிது பேஸ்டை வைத்து லேசாக தேய்த்து துடைக்க கீறல் மறையும்.

* வைரக் கம்மல், மூக்குத்தி, மோதிரம் பளபளக்க டூத் பிரஷ்ஷில் லேசாக பேஸ்ட் வைத்து மெதுவாக தேய்த்துக் கழுவலாம்.

* துணிகளில் லிப்ஸ்டிக் கறை, இங்க் கறை இருந்தால் கொஞ்சம் பேஸ்டை வைத்து தேய்த்து அலசலாம்.

* உங்களின் குழந்தை சுவர்களில் கிறுக்கிய கிரேயான் கிறுக்கல்கள் உள்ள இடங்களில் டூத்பேஸ்டை தேய்த்து ஒரு கிழிந்த துணியை நீரில் நினைத்து துடைக்க சுவர் பளபளப்பாகும்.

* கார் பெட்டில் விடாப் படியாக ஒட்டிக் கொண்டிருக்கும் கறைகளை பற்பசையை வைத்து தேய்த்து அலசலாம்.

* கொசுக்கள் கடித்த இடங்களில் பற்பசையைத் தடவ வலியும், அரிப்பும் விலகும்.

* ஆணி அடித்த ஓட்டையை நிரப்ப டூத்பேஸ்டை பயன்படுத்துங்கள்.

* கார் ஹெட்லைட், டூ வீலர் ஹெட்லைட் சுத்தம் செய்ய டூத்பேஸ்டை தண்ணீரில் கரைத்து அந்த நீரால் துடைக்கப் பளிச்சிடும்.

* பரு உள்ள இடத்தில் இரவில் டூத்பேஸ்டை தடவி விட்டு தூங்கி காலையில் பார்த்தால் பருகாணாமல் போகும்.

* வெள்ளி, பித்தளை பாத்திரங்களை சுத்தம் செய்ய டூத்பேஸ்ட் பயன்படுத்தலாம்.

* ஃபர்னிச்சர்களில் தேநீர் கப்பை வைக்கும்போது படியும் தேநீர் கறை உள்ள இடத்தில் டூத்பேஸ்டை தடவி, பின் நீரால் கழுவ கறை காணாமல் போகும்.

* சமையலறையில் கைகளில் சூடுபட்டால், உடனே அந்த இடத்தில் குளிர் நீரை ஊற்றி, அங்கு டூத்பேஸ்ட் தடவினால் எரிச்சல் குறையும்.

*பாத்ரூம் குழாயில் பிடித்துள்ள துருவைப் போக்க டூத்பேஸ்டை பயன்படுத்தலாம்.

- அபர்ணா சுப்ரமணியம், மயிலாப்பூர்.

Tags :
× RELATED சிறுநீரகக் கற்களுக்கு ஆயுர்வேதத் தீர்வு!