அதிதி ஷங்கர் ஃபிட்னெஸ் சீக்ரெட்!

நன்றி குங்குமம் டாக்டர்

தமிழ்த் திரை உலகின் பிரம்மாண்ட இயக்குனரான ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர். சமீபத்தில், வெளிவந்த ’விருமன்’  படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்து தமிழ்  ரசிகர்களின் கவனத்தை  ஈர்த்துள்ளார். அடுத்ததாக  சிவகார்த்திகேயனுடன் மாவீரன் படத்தில் ஜோடி சேருகிறார்.   அடிப்படையில், மருத்துவம் படித்துள்ள  அதிதிக்கு,  சிறுவயது முதலே நடிப்பின் மீதிருந்த  தீராத காதலால்  தற்போது  நடிகையாகியுள்ளார்.  நடிப்பு மட்டுமில்லாமல்,  மாடலிங்,  டான்ஸ்,  பாட்டு என  கைதேர்ந்தவர் அதிதி.  இவர்,   தனது  ஃபிட்னெஸ்  ரகசியங்களை  நம்முடன்  பகிர்ந்து கொள்கிறார்:

பொதுவாக  நடிகையாகிவிட்டோம் அதனால், பிட்னெஸ் ஃபாலோ பண்ணணும் அப்படியெல்லாம் இல்லை. எனக்கு எப்போதுமே ஃபிட்டாக இருப்பது பிடிக்கும். அதனால்  சிறுவயது முதலே   ஃபிட்னெஸ்  பயிற்சிகள்  எல்லாம்  செய்துவருகிறேன். இப்போது நடிகையாகிவிட்டேன்  என்பதற்காக  தனிப்பட்ட கவனம் எதுவும் செலுத்துவதில்லை.

உடற்பயிற்சி

காலையில்  சீக்கிரமாகவே எழுந்துவிடும் பழக்கம் உடையவள் நான். முதலில்  யோகாவுடன் எனது  வொர்க்கவுட்ஸ்  தொடங்கும். பின்னர், நடைப்பயிற்சி அரைமணி நேரம் செய்வேன். அதன் பின்னர்,   ஸ்ட்ரெச்சிங்  பயிற்சிகள் அரை மணி நேரம். பின்னர், ஸ்டேமினாவை அதிகரிக்கும் வகையில் பைலேட்ஸ் பயிற்சிகள் செய்வேன். பின்னர்,  புஷ்- அப், புல் - அப், க்ரஞ்சஸ் மற்றும் ஸ்குவாட் பயிற்சிகளும்  செய்வேன். இவையெல்லாம்  எனது  தினசரி  உடற்பயிற்சிகளாகும். பின்னர்,  கால்களுக்கு வலுசேர்க்கும் வகையில்  ஒரு மணி நேரம் டான்ஸ் பயிற்சிகள்  செய்வேன். இவைதான் எனது வொர்க்கவுட் ரகசியங்கள்.

 உணவுப் பழக்கம்

காலையில் கொழுப்பின் அளவு  குறைந்த  பால் அல்லது   ஏதேனும் ஒரு பழச்சாறு மற்றும் வெஜ்  சாண்ட்விச்  எடுத்துக் கொள்வேன்.  மதிய உணவில்,  பச்சைக் காய்கறிகள்,  சாலட்,  அரிசி சாதம், தயிர்  நிச்சயம் இருக்கும். இரவில் பழங்கள், சப்பாத்தி, பால் எடுத்துக்கொள்வேன். இவ்வளவுதான் என்னுடைய தினசரி  உணவுமுறைகளாகும். பொதுவாக நான் டயட் ஓரளவுக்குதான்  பலோ பண்ணுவேன். மற்றபடி, இதை சாப்பிடக்கூடாது, அதை சாப்பிடக்கூடாது என்று என்னைத் தண்டித்துக்கொள்கிற அளவு,  வருத்திக் கொள்கிற அளவு  எல்லாம்  டயட் பலோ பண்ண மாட்டேன்.  

மட்டன்  பிரியாணி  ரொம்ப பிடிக்கும். அம்மன் மெஸ், குமார்  மெஸ்  என்று  ஸ்ட்ரிட்  புட்டில்  கிடைக்கும்  கோழி இட்லி,  தட்டு இட்லி  இவையெல்லாம்  கூட  விரும்பி சாப்பிடுவேன். அதுபோன்று  சாக்லேட்ஸ்  எப்போதுமே எனது  பேவரேட் ஆகும்.  என்னைப் பொருத்தவரை ஆசைப்பட்டதை சாப்பிட்டு விடவேண்டும்.  அப்படியே  பிடித்ததை சாப்பிட்டாலும்,  அதற்கு தகுந்த ஒர்க்கவுட்  செய்துவிடுவேன்.

பியூட்டி சிக்ரெட்ஸ்

உண்மை சொல்ல வேண்டும் என்றால் என்னுடைய பியூட்டி சிக்ரெட்ஸ்  என்று எதுவுமில்லை. என்னுடைய  ஜீனிலிருந்து  ஹெல்த்தியான ஸ்கின் வந்துள்ளதாக  நினைக்கிறேன். அம்மாவுக்கு  நல்ல ஸ்கின் டோன் உண்டு.  அதுதான் எனக்கு  வந்திருப்பதாக நினைக்கிறேன். அம்மா, அப்பாவிடமுள்ள பியூட்டிதான்  எனக்கு வந்திருக்கிறது.

ஹாபிஸ்:

டிராவலிங், ஷாப்பிங்,  பிளாகிங் போன்றவை எனக்கு பிடித்த விஷயங்கள். இந்தியாவில்  பெங்களுரு, ஹைதராபாத் ரொம்ப பிடிக்கும்.  அடிக்கடி  அங்குதான் செல்வேன்.  இது தவிர, சமீபத்தில்  சவுத் ஆப்ரிக்கா  சென்று வந்தேன்.  எனக்கு   மிருகங்கள்  ரொம்ப பிடிக்கும்.  அந்தவகையில்  சவுத் ஆப்ரிக்காவில் நிறைய  மிருகங்கள்  இருந்தது  பிடித்திருந்தது.  சென்னையில்  ரொம்ப பிடித்த இடம் மெரினா பீச்.

5 வயதில் இருந்து பாட்டு கற்றுக்கொள்கிறேன். 8 ஆண்டுகள் கர்நாடக இசை கற்றுக் கொண்டேன்.  வெர்ஸ்டன் பாப், ஹிந்துஸ்தானி என இப்போது வரை பாடப் பயிற்சி எடுத்துக் கொண்டுதான் இருக்கிறேன். முதல் படத்திலேயே யுவன் இசையில் ‘மதுரை வீரன் அழகுல’ பாடியது  மறக்க முடியாத அனுபவம்.

டாக்டர் ஆக வேண்டும் என்றுதான்  மருத்துவம் படித்தேன். ஆனால், என் பேஷன் முழுக்க முழுக்க  சினிமாவையே சுற்றிச் சுற்றி வந்ததால் நடிக்க வந்துவிட்டேன். இருந்தாலும்,  முதல் படத்திலேயே எனக்கு இவ்வளவு துாரம் வரவேற்பு  கொடுத்து,  நடிகை என்று ஏற்றுக் கொண்டு அன்புமழை பொழிந்த ரசிகர்களுக்கு  எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தொகுப்பு : ஸ்ரீதேவி குமரேசன்

Related Stories: