ஒரே கூரைக்குள் அனைத்து சிகிச்சை முறைகள்!

நன்றி குங்குமம் தோழி

 

குழந்தைகளின் பள்ளிக்கூடத்தில் அட்மிஷன் போடுவதற்காக பெற்றோர்கள் வரிசையில் காத்திருப்பார்கள். அதைத் ெதாடர்ந்து மக்களின் கூட்டம் அலைமோதும் இடம் மருத்துவமனைகள். உடலில் சின்ன பிரச்னை ஏற்பட்டாலும் உடனே நம்முடைய மனம் பதைபதைக்க வைக்கும். காரணம், இப்போது படிப்பிற்கு அடுத்து அதிக செலவு என்றால் மருத்துவ செலவு என்றுதான் ெசால்ல வேண்டும். அந்த மருத்துவத்தை எல்லோருக்கும் சமமாக வழங்க வேண்டும் என்ற வகையில் மதுரையில் 75 ஆண்டுகளாக இயங்கி வருகிறது டாக்டர் தன்வந்திரி பிரோம்னேவல் ஆயுர்வேத நிலையம். இந்த ஆயுர்வேத நிலையத்தில் மருந்துகளுக்கு மட்டுமே குறைந்த கட்டணம் என்பது மட்டுமில்லாமல், ஆயுர்வேத முறையில் அனைத்து நோய்களையும் பூரணமாக குணப்படுத்தி வருகிறார்கள். இந்த மருத்துவமனையை நிர்வகித்து வரும் கவிதா அவர்களை சந்தித்து பேசினோம்.

நிர்வாகப் பொறுப்பு...

நான் பி.காம் பட்டதாரிதான். 1996ம் ஆண்டு டாக்டர் தன்வந்திரி  பிரோம்னேவல் அவர்களை நான் திருமணம் செய்து கொண்டேன். அதன் பிறகுதான் இந்த மருத்துவமனையின் நிர்வாகப் பொறுப்பினை ஏற்றுக்கொண்டேன். என் கணவரின் தாத்தா வேலாயுதம் பிள்ளை அவர்கள் தான் இந்த ஆயுர்வேத மருத்துவமனையை 1945ம் ஆண்டு துவங்கினார். என் மாமனார், மாமியார் இருவரும் ஆயுர்வேத மருத்துவர்கள் என்பதால், தாத்தாவிற்குப் பிறகு அவர்கள் நிர்வகித்தார்கள்.

இப்போது நானும் என் கணவர் அவர்களும் தலைமை ஏற்ற பிறகு மதுரை அழகப்பன் நகரில், அதிநவீன வசதிகளுடன் நடத்தி வருகிறோம். நான் நிர்வாகப் பொறுப்பினை ஏற்ற போது என் மாமனார், மாமியார் இருவரும் சொன்ன ஒரே விஷயம் மனிதநேயம், மனிதாபிமானம் மற்றும் சேவை மனப்பான்மையினை கைவிடக்கூடாது என்பதுதான். மருத்துவத்தை வியாபாரமாக பார்க்கக் கூடாது என்பது எங்களின் தாரக மந்திரம்.

பல கிளைகள்...

ஆரம்பத்தில் மதுரையில் மட்டும்தான் செயல்பட்டு வந்தது. அதனால் மக்கள் பல இடங்களில் இருந்து வருவார்கள். சிலர் இரவே இங்கு வந்திடுவார்கள். இந்த நிலை மாற வேண்டும்னு நினைச்சேன். மக்கள் எங்களை நாடி வருகிறார்கள். அவர்களுக்கு கஷ்டமில்லாத சிகிச்சை அளிக்க விரும்பினேன். அதன் அடிப்படையில் தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா உட்பட 25 கிளைகளுக்கு மேல் நிறுவினேன். அதில் என் கணவரிடம் பயிற்சி பெற்ற சிறந்த ஆயுர்வேத மருத்துவர்களை நியமித்தேன். இதன் மூலம் நோயாளிகள் தங்களின் உடல் உபாதையுடன் முதல் நாள் இரவே மருத்துவமனை வாசலில் வந்து படுக்க வேண்டாம். அவர்களின் ஊர்களில் அருகே இருக்கும் எங்கள் மருத்துவமனை கிளைகளுக்கு நேரடியாக சென்று சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம்.

ஆயுர்வேத மருத்துவத்தின் சிறப்பு

இங்கு நாடிப் பார்த்தே ஒருவரின் உடலில் என்ன பிரச்சனை என்று கண்டறிய முடியும். இதற்காகவே பல நோயாளிகள் எங்களின் சிகிச்சை முறைகளை நாடிவருகிறார்கள். குறிப்பாக ‘பஞ்சகர்மா’ எனும் ஆயுர்வேத சிகிச்சை முறை. இந்த சிகிச்சை மூலம் மூட்டுவலி, முதுகுத்தண்டு வலி, வாத நோய்கள் அனைத்திலும் பூரண குணம் அடையலாம். தற்போது பலர் மூட்டு வலியினால் அவதிப்படுகிறார்கள். அவர்களுக்கு இந்த சிகிச்சை நல்ல பலன் அளிக்கும். அடுத்து குழந்தையின்மை பிரச்சனை. அதற்கு ஆயுர்வேத முறையில் சிறந்த சிகிச்சை உள்ளது. இங்கு தங்கி சிகிச்சை பெறும் வசதியும் உள்ளது. குறிப்பாக ஆட்டிசம் பாதிக்கப்பட்ட குழந்தைகள் முதல் வயதானவர்களின் உடல்நல பாதிப்புகள் வரை அனைத்து வகையான நோய்களுக்கும் ஆயுர்வேதம் நல்ல தீர்வாக அமைந்துள்ளது.

எதிர்கால லட்சியம்

என்னுடைய கணவர் ஆயுர்வேத நிபுணர் என்பதால், நான் அவரின் மருத்துவமனையினை நிர்வகித்து வருகிறேன். அதே சமயம் ஆயுர்வேதம் மட்டுமில்லாமல் அலோபதி, சித்தா போன்ற மருத்துவங்களும் உள்ளன. ஒரு சிலருக்கு அலோபதி மற்றும் சித்தா முறை சிகிச்சை பலன் அளிக்கும். அதனால் அந்த மருத்துவ முறைக்கான மருத்துவமனையினை அமைக்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளது. சிம்பிளாக சொல்ல வேண்டும் என்றால், ஒரே கூரைக்குள் அனைத்து மருத்துவமும் கொண்டு வரவேண்டும் என்பது மட்டுமில்லாமல், ஏழை எளியவர்களுக்கு குறைந்த செலவில் மருத்துவ சிகிச்சையினை அளிக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய எதிர்கால திட்டம்.

தொகுப்பு: விஜயா கண்ணன்

Related Stories: