அழகுக் குறிப்புகள் 10!

நன்றி குங்குமம் டாக்டர்

கடலை மாவையும்,   கோதுமை மாவையும் சம அளவில்  எடுத்து நன்கு  சலித்து அதைக் காய்ச்சிய  பாலில் கலந்து முகம்,  கை, கால்களில்  தடவி வந்தால்,  முகத்திலுள்ள  கரும்புள்ளிகள்  காணாமல்  போய்விடும். வெட்டி வேரைக் காய  வைத்துப் பொடித்து அதனுடன்  ஆலிவ்  ஆயிலும், நீரும் சேர்த்து முகத்தில்  தடவி  வந்தால், முகத்திலுள்ள  கரும்புள்ளிகள்  

காணாமல்  போய்விடும்.

பாசிப் பயறு மாவுடன், கஸ்தூரி மஞ்சள், எலுமிச்சம்பழச் சாறு, சிறிது பால்  ஆகியவற்றைக் கலந்து  முகத்தில்  தடவி, உலர்ந்தபின் கழுவினால்  பூவாய்  பொலிவோடு  திகழும்  முகம்.முகத்தில் உள்ள  அழுக்கை  அகற்ற  வெள்ளரிக்காய்ச்  சாற்றுடன் பால் கலந்து  பஞ்சைக்  கொண்டு  முகத்தில்  கீழிருந்து  மேலாக  அழுத்தித் தேய்த்தால் போய்முகம்  பளபளவென்று  இருக்கும்.

கஸ்தூரி மஞ்சளுடன் சிறிது தயிர்  கலந்து  முகத்தில்  தடவி,  அது உலர்ந்த  பின் குளித்தால்  முகம் பளிச்சிடும்.உருளைக்கிழங்கு  சாறு இரண்டு  ஸ்பூனோடு  ஒரு ஸ்பூன் கடலை மாவையும் கலந்து முகத்தில் தடவி, அது உலர்ந்தபின்  கழுவிப் பாருங்கள்,  முகப் பொலிவோடு  இருப்பீர்கள்.காலையில் எழுந்ததும் குளிப்பதற்கு முன்பு  இரண்டு  சொட்டு நல்லெண்ணெயை  முகத்தில்  தடவி சிறிது  நேரம்  வைத்திருந்துவிட்டு  குளித்தால்,  முகத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கி  முகம் பளிச்சென்று  இருக்கும்.

குளிப்பதற்கு  முன் பாலேட்டை  முகத்தில்  தடவி  பதினைந்து  நிமிடம்  கடலைமாவைத் தேய்த்து  வந்தால்,  முகம்பட்டு  போல்  பளபளப்பாக  இருக்கும். கேரட்டை துருவி அரைத்து, பாலுடன் கலந்து முகத்தில் தடவி, உலர்ந்த பின் கழுவிவிட வேண்டும்.  இவ்வாறு  வாரம் ஒரு முறை  செய்து வந்தால் முகம்  அழகாகும். முகம் பொலிவாக  பளிச்சென்று  இருக்க  தினமும்  குறைந்தது பத்து டம்ளர்  தண்ணீர்  குடிக்க  வேண்டும். புதிய  பழங்களைச் சாப்பிட  வேண்டும். உணவில்  பச்சை,  சிவப்புநிறக்  காய்கறிகளை  அதிக அளவில்  சேர்த்துக் கொள்ள  வேண்டும். வேப்பிலைகளில் நல்ல கொழுந்து  இலைகளை  எடுத்து, அரைத்து, பரு உள்ள இடத்தில் பூசி வர, பருக்கள் மறைந்து முகம் ஒளிரும்.

தொகுப்பு : ரிஷி

Related Stories: