×

கன்னியாகுமரியில் சுய உதவிக்குழு உற்பத்தி பொருட்கள் கண்காட்சி இன்று தொடக்கம் கலெக்டர் தகவல்

நாகர்கோவில், ஜூன் 21 :குமரி மாவட்ட கலெக்டர் பிரசாந்த் எம்.வடநேரே வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு:தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனத்தின் மூலம் கன்னியாகுமரி மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்களின் உற்பத்தி பொருட்களை சந்தை படுத்திட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக பொதுமக்களின் மத்தியில்மகளிர் சுய உதவிக்குழுக்களின் உற்பத்தி பொருட்களை பிரபலப்படுத்தும் வகையில் கண்காட்சிநடத்தபட்டு வருகிறது.  கன்னியாகுமரியில் உள்ள பூம்புகார் அர்பன் ஹாட் மற்றும் அருகில்உள்ள மைதானத்தில் இன்று முதல் ஜூலை 2ம் தேதி வரை 12 நாட்கள் மகளிர் சுய உதவிக் குழுவினரால் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் விற்பனை தொடர்பான கண்காட்சி நடைபெறஉள்ளது.   

இக்கண்காட்சியில் குமரி மாவட்ட மகளிர் சுய உதவிக் குழுக்கள் உற்பத்திசெய்த கைவினை பொருட்கள், பனை ஓலை பொருட்கள், ஆயத்த ஆடைகள், எம்பிராய்டரி துணி வகைகள், துணிப் பைகள், ரெக்சின் கைப்பைகள், வாழை நார் பொருட்கள், உணவு பொருட்கள் மற்றும் தேன் உள்ளிட்ட பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட உள்ளன.
இவ்வாறு செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
× RELATED கொல்லங்கோடு அருகே ஓட்டலில் தோசை கேட்டவர் மீது தாக்குதல்