×

வரத்து குறைவால் வெங்காய விலை உயர்வு

தஞ்சை, ஜூன் 21: தஞ்சை மார்க்கெட்டிற்கு வரத்து குறைவால் வெங்காயம் விலை உயர்ந்துள்ளது.
தஞ்சை மார்க்கெட்டில் 10 மொத்த விற்பனையாளரும், 50 க்கும் மேற்பட்ட சில்லரை விற்பனையாளர்களும் உள்ளனர். இங்கு பல்லடம், உடுமலைப்பேட்டை, செட்டிகுளம், துறையூர், பெரம்பலூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து சுமார் 30 டன் சின்ன வெங்காயமும், பெங்களூரு, பூனே, மும்பை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 70 டன் பெரிய வெங்காயம் தினமும் விற்பனைக்கு வருகிறது. இம்மார்க்கெட்டில் பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு, திருக்காட்டுப்பள்ளி உள்ளிட்ட  சுற்றுப்பகுதியிலுள்ள கிராமங்கள் மற்றும் வெளியூர் வாசிகள் மொத்தமாகவும், சில்லரையாகவும் வெங்காயத்தை வாங்கி செல்கின்றனர். இதனால் தினந்தோறும் பல லட்ச ரூபாய் வர்த்தகம் நடைபெற்று வருகிறது.

 இந்நிலையில் கடந்த சில நாட்களாக பெங்களூர் மற்றும் வெளி மாநிலங்களில் பலத்த மழை பெய்து வருவதால் வெங்காயத்தின் வரத்து குறைந்து விட்டது.
மேலும், மழையில் நனைந்து வருவதால் 50 கிலோ மூட்டைக்கு சுமார் 10 கிலோ வரை அழுகி விடுகிறது. வரத்து குறைவால் சின்ன வெங்காயம் கடந்த வாரம் ரூ.30க்கு விற்றது தற்போது ரூ.60க்கு விற்பனை செய்யப்படுகிறது. ரூ.15க்கு விற்கப்பட்ட பெரியவெங்காயம் ரூ.25க்கு விற்கப்படுகிறது. இதேநிலை நீடித்தால் வெங்காயம் விலை ரூ.100 வரை விலை உயரும் என்று மொத்த விற்பனையாளர்கள் தெரிவித்தனர்.

Tags :
× RELATED தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதியில்...