×

வன்கொடுமை தடுப்பு சட்டம் திருத்தம் எதிர்த்து ஜூலை 2ம் தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ரயில் போராட்டம்

கும்பகோணம், ஜூன் 21: வன்கொடுமை சட்டத்தை உச்சநீதிமன்றம் திருத்தியதை எதிர்த்து வரும் ஜூலை 2ம் தேதி மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபெற உள்ள ரெயில் மறியல் போராட்டம் குறித்த ஆயத்த கூட்டம் கும்பகோணத்தில் நடைபெற்றது.கூட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழ உறுப்பினர் சின்னை பாண்டியன் தலைமை வகித்தார்.கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்,இதில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தை உச்ச நீதிமன்றம் திருத்தியதை எதிர்த்து வரும் ஜூலை 2 ந்தேதி கும்பகோணத்தில் ரயில் மறியல் போராட்டம் செய்வது, அன்று அனைத்து கட்சி சார்பில் ஏராளமானோர் கலந்து கொள்வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் மனோகரன், ஒன்றிய செயலாளர்கள் ஜேசுதாஸ், ஜீவபாரதி, நகர செயலாளர் செந்தில்குமார், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் தமிழருவி, மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் முகமது செல்லப்பா, இந்திய தவ்ஹீத் ஜமாத் மாவட்ட தலைவர் ஜாபர், எஸ்.டி.பி.ஐ கட்சி மாவட்ட பொது செயலாளர் பக்ருதீன், நீலப்புலிகள் இயக்க தலைவர் இளங்கோவன், வெல்பர் பார்ட்டி ஆஃப் இந்தியா மாவட்ட தலைவர் அப்துல் ரஹ்மான், மக்கள் அரசு கட்சி மாவட்ட செயலாளர் ராஜ்குமார், தீண்டாமை ஒழிப்பு முன்னணி நிர்வாகிகள் பேராசிரியர் அரங்கசுப்பையா, செல்வமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதியில்...