×

விரைவில் திறக்க பொதுமக்கள் கோரிக்கை தஞ்சையில் கருகும் செடிகளுக்கு புத்துயிர் ஊட்டும் தன்னார்வ அமைப்பு

தஞ்சை,ஜூன் 21: தஞ்சையில் வெயிலினால் காய்ந்து வரும் செடிகளுக்கு ஒரு தனியார் அமைப்பு வாகனம் மூலம் தண்ணீர் ஊற்றி புத்துயிர் ஊட்டுவதை சமூக ஆர்வலர்கள் வரவேற்றுள்ளனர்.தஞ்சை நகரப்பகுதியை சுற்றிலும் பைபாஸ் வட்ட சாலை கடந்த சில ஆண்டுகளுக்கு முன் போடப்பட்டது. இதில் திருவையாறு சாலை மனக்கரம்பை, கும்பகோணம் சாலையில் பள்ளியக்கரஹாரம், புதுக்கோட்டை சாலையிலுள்ள ரவுண்டானா ஆகிய இடங்களில் பெரியளவில் ரவுண்டானா அமைத்து அதில் அழகிற்காக பூச்செடிகள், மின் விளக்குகள் அமைக்கப்பட்டது. அங்குள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுவதற்காக ஆழ்குழாய் மோட்டார் அமைக்கப்பட்டது. ஆனால் ரவுண்டானாவில் அமைக்கப்பட்ட ஆழ்குழாயில் தண்ணீர் வராமல் போனதால் அழகுக்காக நட்ட பூச்செடிகள் கருகின.

இதேபோல் மெடிக்கல் காலேஜ் ரோடு, மேம்பாலம் ரோடு உள்ளிட்ட சாலைகளில் சென்டர் மீடியனில் நட்ட செடிகள், பூச்செடிகள், அழகு செடிகள் வெயிலுக்கு வாடியது.இதனையடுத்து நெடுஞ்சாலைத்துறையினர் கட்டுப்பாட்டில் உள்ள ரவுண்டானாக்கள், சென்டர் மீடியேன்களில் உள்ள செடிகளை பாதுகாக்கவும், கருகியசெடிகள் அகற்றி புதியசெடிகளை அமைக்கவும், தன்னார்வ தனியார் அமைப்பு ஒரு வாகனத்தில் தண்ணீ–்ர் தொட்டியையும், தண்ணீர் பாய்ச்சுவதற்காக ஒருவரை நியமித்து,  சில நாட்களாக  ரவுண்டானாக்கள், சென்டர் மீடியன்களில் காலை முதல் மாலை வரை தண்ணீர் ஊற்றி வருகிறது. மேலும், அவர்கள் வாகனத்திலேயே செடிகளை வைத்துள்ளதால், கருகிய செடிகள் இருந்தால் அதனை அகற்றி விட்டு புதிய செடிகளை நட்டு வைக்கின்றனர். தன்னார்வ அமைப்புகள் போல், பொது மக்களும் தங்களது பகுதியிலுள்ள மரங்களையும், செடிகளை தண்ணீர் ஊற்றி காப்பாற்ற வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags :
× RELATED தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதியில்...